• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விரைவில் காதலனை திருமணம் செய்யும் ரகுல் ப்ரீத்சிங்...!

விரைவில் காதலனை திருமணம் செய்யும் ரகுல் ப்ரீத்சிங்...!

ரகுல் ப்ரீத் சிங்

ரகுல் ப்ரீத் சிங்

ரகுல் ப்ரீத் சிங் தனது திருமண வேலைகளில் பிஸியாகி வருவதாக மும்பையிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. அவர் இப்போது தமிழில் இந்தியன் 2, அயலான் படங்களில் நடிக்கிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது பிறந்தநாளை முன்னிட்டு சில தினங்கள் முன்பு, தனது காதலனை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், அவர் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக மும்பையிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

2009 இல் சினிமாவுக்கு வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். 2012 இல் தடையற தாக்க படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். புத்தகம், என்னமோ ஏதோ என சில படங்களில் நடித்தாலும் 2017 இல் வெளியான ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று படங்களே அவரை பிரபலமாக்கியது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்து வருகிறார்.

சில தினங்கள் முன்பு, தனது பிறந்தநாளின் போது, நடிகரும், தயாரிப்பாளருமான hக்கி பஹானியை காதலிப்பதாக ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்தார். அவருடன் இருக்கும் வீடியோ, புகைப்படங்களையும் வெளியிட்டார்.

பொதுவாக திரையுலகினரின் காதல் முதலில் மீடியாவில் கசிந்து, சம்பந்தப்பட்டவர்கள் அப்படியெல்லாம் இல்லை என்று மறுத்து, இறுதியில் அவர்களாகவே பிரஸ்ஸை கூட்டி, நாங்க காதலிக்கிறோம் என ஒப்புதல் வாக்குமூலம் தருவதுதான் வாடிக்கை.

Also read... சிங்கள பாடகிக்கு வாய்ப்பு - ஹாரிஸ் ஜெயராஜுக்கு ஈழத்தமிழர்கள் கண்டனம்

ரகுல் ப்ரீத் சிங் விஷயத்தில், யாருக்கும் சந்தேகம் வராத அளவில் பல மாதங்களாக இருவரும் காதலித்து வந்திருக்கிறார்கள். அவரே அறிவிக்கும்வரை அவர்களின் காதல் குறித்து யாருக்கும் தெரியவில்லை

இந்நிலையில், ரகுல் ப்ரீத் சிங் தனது திருமண வேலைகளில் பிஸியாகி வருவதாக மும்பையிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. அவர் இப்போது தமிழில் இந்தியன் 2, அயலான் படங்களில் நடிக்கிறார். இதுதவிர அக்டோபர் 31 லேடீஸ் நைட் படத்திலும் நடித்து வருகிறார். இது தமிழ், தெலுங்கில் தயாராகிறது. அத்துடன், அட்டாக், மே டே, தேங்க் காட், டாக்டர் ஜி, மிஷன் சின்ட்ரெல்லா ஆகிய இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். இதில் டாக்டர் ஜி, மிஷன் சின்ட்ரெல்லா படங்கள் மட்டுமே முடிந்துள்ளன

பிஸியாக படங்களில் நடித்துவரும் நிலையில் ரகுல் ப்ரீத் சிங் திருமணம் செய்வாரா என்ற சந்தேகத்தையும் சிலர் எழுப்பாமல் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: