மது வாங்கிச் சென்றேனா?... பரவிய வீடியோவுக்கு பளார் ரிப்ளை கொடுத்த நடிகை!

ஊரடங்கு காலகட்டத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங், குர்கானில் உள்ள தனது வீட்டின் அருகே இருக்கும் 200 ஏழைக்குடும்பங்களுக்கு உதவி செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

மது வாங்கிச் சென்றேனா?... பரவிய வீடியோவுக்கு பளார் ரிப்ளை கொடுத்த நடிகை!
ஊரடங்கு காலகட்டத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங், குர்கானில் உள்ள தனது வீட்டின் அருகே இருக்கும் 200 ஏழைக்குடும்பங்களுக்கு உதவி செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
  • Share this:
மது வாங்கிச் செல்வதாக பரவிய வீடியோவுக்கு நடிகை ரகுல் ப்ரீத் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.

தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே, தேவ் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்திருந்தவர் ரகுல் ப்ரீத் சிங். மேலும் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.

சமீபத்தில் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், ரகுல் ப்ரீத் சிங் கையில் பாட்டில்கள் வைத்துக் கொண்டு சாலையில் நடக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. மேலும் அந்த வீடியோவைப் பதிவிட்ட நெட்டிசன்கள் ஊரடங்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங், மது வாங்கிச் செல்கிறாரா என்றக் கேள்விக்குறியுடன் தலைப்பிட்டு பதிவிட்டனர்.


இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் ரகுல் ப்ரீத் சிங், மெடிக்கல் ஷாப்பில் மதுபானங்கள் விற்கிறார்கள் என்பதை நான் இதுவரையில் அறிந்ததில்லை என பதிலளித்துள்ளார். ஊரடங்கு காலகட்டத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங், குர்கானில் உள்ள தனது வீட்டின் அருகே இருக்கும் 200 ஏழைக்குடும்பங்களுக்கு உதவி செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.


First published: May 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading