நான் வாழ்க்கையை பயந்து கொண்டு வாழ்கிற ஆளில்லை என்று ரகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளார்.
இன்று முன்னணியில் இருக்கும் நடிகைகள் ஒரே இரவில் அந்த இடத்தை எட்டிவிடவில்லை. பல்வேறு சிரமத்துக்குப் பிறகே ஒரு அடையாளத்தை தங்களுக்கென்று உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ரகுல் ப்ரீத் சிங்கும் இதற்கு விதிவிலக்கல்ல.
2009-ல் கன்னடத்தில் வெளியான கில்லியில் அறிமுகமான போது யாருக்கும் அவரை தெரியாது. ராசியில்லாத நடிகையாக பல படங்களில் நடித்தார். இதில் தெலுங்கு, தமிழ் படங்கள் அடக்கம். ஆறு வருடங்களுக்குப் பிறகு ரவி தேஜாவுடன் நடித்த கிக் 2 படம் ஓரளவு பெயர் சம்பாதித்து தந்தது. அதே வருடம் ராம் சரணுடன் ப்ரூஸ்லீ - தி பைட்டர் படம். அல்லு அர்ஜுனுடன் நடித்த சரைனைடுக்குப் பிறகு ரகுல் ப்ரீத் சிங் அனைவரும் அறிந்த நடிகையானார். அதன் பிறகு நடந்தவை சரித்திரம்.
இந்த வருடம் இந்தியில் மட்டும் மூன்று படங்களில் நடிக்கிறார். இவை தவிர தமிழ், தெலுங்குப் படங்கள். இந்த இடத்தை அடைந்ததைப் பற்றி கூறும் போது, "நான் பயந்தபடி வாழும் ஆளில்லை. நான் எதுவும் இல்லாமல் தான் இங்கு வந்தேன். நான் எப்போதும் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் பிரகாசமான பகுதியை மட்டுமே பார்ப்பேன். எனக்கு வாய்ப்பு கிடைத்தது, இப்போது என்னுடைய கனவில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்" என்றார்.
மரத்தைச் சுற்றி டூயட் பாடும் நாயகிகளுக்குப் பின்னும் நாலு பக்க சுயமுன்னேற்ற குறிப்பு இருக்கத்தான் செய்கிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rakul preet singh, Tamil Cinema