Rakul Preet Singh: காண்டம் பரிசோதனையாளர் - விரும்பி ஏற்றுக் கொண்ட ரகுல் ப்ரீத் சிங்!

ரகுல் ப்ரீத் சிங்

இந்த காண்டம் தயாரிப்பாளர் வேடத்துக்கு முதலில் அவர்கள் அணுகியது சாரா அலிகான்.

  • Share this:
    வில்லங்கமான வேடமா? வாரே வா என்று விரும்பி அழைக்கிறவர்களும் இருக்கிறார்கள், வம்பே வேண்டாம் என்று விலகி ஓடுகிறவர்களும் இருக்கிறார்கள். இந்த இரண்டும் ஒரே படத்தில் நடந்திருக்கிறது.

    பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் ரோனி குருவிலா, ஓடிடிக்கு என்றே படங்கள் தயாரிக்கிறார். வித்தியாசமான, கேட்ட உடன் ஆச்சரியப்படுத்தும் கதையாக இருக்க வேண்டும் என்பது முதல் விதி. மினிமம் பட்ஜெட் துணை விதி. இந்த இரண்டும் பொருந்துவது போல் ஒரு கதையை பிடித்திருக்கிறார்கள். அதுதான் காண்டம் பரிசோதனையாளர்.

    காண்டம் தயாரிக்கும் நிறுவனங்கள் புதிய ரக காண்டத்தை தயாரிக்கையில், அதன் பயன்பாடு குறித்து அறிய, 18 வயதுக்கு மேல் உள்ள பெண்களை வேலைக்கு அமர்த்தி, அவர்கள் தரும் பரிசோதனை முடிவை வைத்து தங்கள் தயாரிப்பின் தரத்தை உறுதி செய்வார்கள். இந்த காண்டம் பரிசோதனையாளர்களை மையப்படுத்தி ரோனி குருவிலா ஒரு படத்தை எடுப்பதாகவும், ரகுல் ப்ரீத் சிங் காண்டம் பரிசோதனையாளராக நடிப்பதாகவும் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது புதிய தகவல் ஒன்றையும் தயாரிப்பாளர் தரப்பு கூறியுள்ளது.

    இந்த காண்டம் தயாரிப்பாளர் வேடத்துக்கு முதலில் அவர்கள் அணுகியது சாரா அலிகான். நடிகர் சயிப் அலிகானின் மகள் (சயிப் அலிகானின் முதல் மனைவிக்கு பிறந்தவர்). படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தை குறித்து கேட்டதும், நான் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன் என்று விலகியுள்ளார். அடுத்ததாக அனன்யா பாண்டேவை அணுகியிருக்கிறார்கள். கதாபாத்திரத்தை சொன்னதும், இருக்கிற இமேஜை டேமேஜ் செய்ய விருப்பமில்லை, என அவரும் விலகி ஓடியிருக்கிறார். அதன் பிறகுதான் ரகுல் ப்ரீத் சிங்கிடம் சென்றிருக்கிறார்கள்.

    இப்படியொரு வேடத்துக்குதான் காத்திருந்தேன் என்று அவர் கப்பென்று பிடித்துக் கொள்ள, படத்தின் ப்ரீ-புரொடக்ஷனை உற்சாகமாக ஆரம்பித்திருக்கிறார்கள்.

    இந்த வருடமே படத்தை ஓடிடியில் எதிர்பார்க்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: