Home /News /entertainment /

காதலர் தினத்தில் காதல் கணவரை விவாகரத்து செய்த பிரபல நடிகை

காதலர் தினத்தில் காதல் கணவரை விவாகரத்து செய்த பிரபல நடிகை

ராக்கி சாவந்த் - ரித்தேஷ்

ராக்கி சாவந்த் - ரித்தேஷ்

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராக்கி சாவந்த் அதில் தனது கணவர் ரித்தேஷை அறிமுகப்படுத்தினார்.

    காதலர் தினத்தில் விவாகரத்தை அறிவித்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த்.

    இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ராக்கி, “அன்புள்ள நண்பர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் சொல்ல விரும்புவது, நானும் ரித்தேஷும் மனமொத்து பிரிய முடிவு செய்துள்ளோம். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல விஷயங்கள் நடந்தன. அதில் பல விஷயங்கள் எனக்குத் தெரியாது. நாங்கள் வேறுபாடுகளைக் கையாள முயற்சித்தோம். ஆனால் இருவரும் இணக்கமாக பிரிந்து செல்வது தான் சிறந்தது என்று நான் நினைக்கிறேன். இருவரும் எங்கள் வாழ்க்கையை தனித்தனியாக அனுபவிக்கிறோம்.

    இது காதலர் தினத்திற்கு முன்பே நடக்க வேண்டும். ஆனால் இப்படி ஒரு முடிவெடுத்ததில், நான் மிகவும் வருத்தமாகவும் மனம் உடைந்ததாகவும் இருக்கிறேன். ரித்தேஷ் அவரது வாழ்க்கையில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன். ஆனால் வாழ்க்கையின் இந்த கட்டத்தில் நான், எனது வேலை மற்றும் என் வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும். என்னை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும். எப்போதும் என்னைப் புரிந்துகொண்டு ஆதரவளித்ததற்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

    பைக் பயணத்தோடு விக்ரமின் மகான் படத்தை கொண்டாடிய ரசிகர்கள்!



     




    View this post on Instagram





     

    A post shared by Rakhi Sawant (@rakhisawant2511)






    எக்ஸெலெண்ட், சூப்பர், பிரிலியண்ட்... கார்த்திக் சுப்புராஜை வாழ்த்திய ரஜினிகாந்த்!

    இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராக்கி சாவந்த் அதில் தனது கணவர் ரித்தேஷை அறிமுகப்படுத்தினார். ஏற்கனவே திருமணமான ரித்தேஷ் மீது அவரது முதல் மனைவி பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bollywood actress

    அடுத்த செய்தி