ரசிகரைத் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை!

news18
Updated: September 3, 2019, 5:02 PM IST
ரசிகரைத் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை!
ராக்கி சாவந்த்
news18
Updated: September 3, 2019, 5:02 PM IST
பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், லண்டனைச் சேர்ந்த இந்தியரைத் திருமணம் செய்து கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

மும்பையில் ஜூலை 20 அன்று ராக்கி சாவந்த் - ரித்தேஷ் ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

லண்டன் வாழ் இந்தியரான ரித்தேஷ் உடனான காதல் குறித்து ஒரு பேட்டியில் ராக்கி சாவந்த் கூறியதாவது,  "நான் என்னுடைய ரசிகரைத் திருமணம் செய்து கொண்டுள்ளேன். என்னை மிகவும் ரசிக்கும் ரசிகர் அவர். வழக்கமாக ரசிகர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான மெசேஜ்கள் எனக்கு வரும். ஒருநாள் நான் மிகவும் கவலையோடு இருந்தேன். அப்போது ஏன் இப்படிக் கவலையாக இருக்கிறீர்கள் என்று கேட்டு எனக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பினார் ரித்தேஷ். நான் அதிர்ந்து விட்டேன்.


நான் அந்த மனநிலையில் உள்ளதாக எப்படி நினைத்தீர்கள் என அவரிடம் கேட்டேன். நீங்கள் என்ன மனநிலையில் இருப்பீர்கள் என்று எண்ணும் அளவுக்கு நான் உங்களுடைய நீண்ட நாள் ரசிகன் என்று பதில் அளித்தார். அப்போதே அவர் மீது நான் காதல் கொண்டேன். அவரை ஒருநாள் திருமணம் செய்வேன் என்று அப்போதே தெரியும்.

நான் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர். அவர் இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர், இந்துமதம். அவருடனான பழக்கம் ஏற்பட்ட பிறகு நான் அவருடைய மனைவியாக வேண்டும் என்று இயேசுவிடம் வேண்டிக் கொண்டேன். அவர், டொனால்ட் டிரம்பின் நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிகிறார்.

நான் ஐட்டம் பாடல்களுக்கு நடிப்பதால் என்னுடைய திருமணச் செய்தியை அறிந்தால் எனக்கு வாய்ப்பு அளிப்பார்களா என அஞ்சினேன். அதனால் தான் என் திருமணச் செய்தியை ரகசியமாக வைத்திருந்தேன். எங்களுக்குக் குழந்தை பிறந்தபிறகு குழந்தைகளுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்றார். அவர் ஊடகங்களைச் சந்திக்க தயாராக இருப்பார் என்று கூறியுள்ளார்.

Loading...

வீடியோ பார்க்க: கோமாளி பட சர்ச்சை தொடர்பாக ஐசரி கணேஷ் விளக்கம்

First published: August 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...