ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'வாரிசு' இசை வெளியீட்டு விழாவில் 'நண்பர்' அஜித் குறித்து விஜய் பேசுவாரா?

'வாரிசு' இசை வெளியீட்டு விழாவில் 'நண்பர்' அஜித் குறித்து விஜய் பேசுவாரா?

துணிவு அஜித் குமார் - வாரிசு விஜய்

துணிவு அஜித் குமார் - வாரிசு விஜய்

வாரிசு இசை வெளியீட்டு விழாவை சின்னத்திரை நடிகரும் பிக்பாஸ் டைட்டில் வின்னருமான ராஜு ஜெயமோகன் தொகுத்து வழங்கப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

தனது ஒவ்வொரு பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் மறைமுகமாக அரசியல் பேசுவார், குட்டி கதைகள் சொல்வார். சில பல காரணங்களால் பீஸ்ட் படத்துக்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. இயக்குநர் நெல்சன் நடிகர் விஜய்யை எடுத்த பேட்டி மட்டும் சன் டிவியில் ஒளிபரப்பானது.

இந்த நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 24 ஆம் தேதி நடைபெறவிருப்பதாக தகவல் வெளியானது. மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய், நடிகர் அஜித்தை 'நண்பர்' என குறிப்பிட்டது ஹைலைட்டாக அமைந்தது.

தற்போது வாரிசு படத்துடன் துணிவு படமும் வெளியாவதால் நடிகர் அஜித் குறித்து என்ன பேசப்போகிறார் என்பது இருவரது ரசிகர்களும் எதிர்பாரத்துக் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் வாரிசு இசை வெளியீட்டு விழாவை சின்னத்திரை நடிகரும் பிக்பாஸ் டைட்டில் வின்னருமான ராஜு ஜெயமோகன் தொகுத்து வழங்கப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியை ராஜு ஜெயமோகன் தனக்கே உரிய பாணியில் கலகலப்பாக தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Actor Ajith, Actor Thalapathy Vijay, Vijay