சினிமா தொழிலாளர்களுக்கு ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!

சினிமா தொழிலாளர்களுக்கு ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!
ரஜினிகாந்த்
  • Share this:
படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சினிமாதொழிலாளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த 19-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் 25 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட பெஃப்சியில் தினசரி 10 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவதாக தெரிவித்திருக்கும் அச்சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, இன்று திரைப்படத்துறையில் நல்ல நிலையில் இருக்கும் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருந்தார்.

அதில் “வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள 15 ஆயிரம் பெஃப்சி ஊழியர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு மூட்டை அரிசி தந்தால் அவர்கள் கஞ்சி சோறாவது சாப்பிட்டு உயிர் வாழ இயலும். 10 ஆயிரம் உறுப்பினர்களுக்கு ஒரு மூட்டை அரிசி அளிப்பதாக இருந்தால் ஒரு மூட்டை சுமாரான அரிசி என்றாலும் ரு.1250 என கணக்கு வைத்தால் ரூ.2 கோடி ஆகிறது.


எனவே வாழ்வாதாரத்தை இழந்து வாடும் குடும்பத்துக்கு உதவுங்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து முதல் ஆளாக நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்தனர். அவர்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம், விஜய்சேதுபதி ரூ.10 லட்சம் என தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளிக்க, நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

மேலும் நடிகர் பிரகாஷ்ராஜ் 150 (25kg) அரிசி மூட்டைகளை தொழிலாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
First published: March 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்