ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கமலின் விக்ரம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது...!

கமலின் விக்ரம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது...!

விக்ரம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது

விக்ரம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது

படத்தில் விஜயசேதுபதி வில்லனாக நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. அவரும் கமலும் மோதும் சண்டைக் காட்சியை பிரமாண்டமாக எடுத்துள்ளனர். தற்போது அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளன.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்து வந்த விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் தொடங்கப்பட்ட திரைப்படம் விக்ரம். மூன்று முன்னணி கதாநாயகர்கள் ஒன்றிணைந்து நடிப்பதால் விக்ரம் படத்திற்கு இந்திய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்தார். கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக விக்ரம் படப்பிடிப்பு தடை பட்டது. அதன் பிறகு கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட போதும் படப்பிடிப்பு தடைபட்டது.

வெளியூரில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகளை சென்னையில் அரங்கு அமைத்து எடுத்தனர். கைதியை போலவே குறுகிய காலகட்டத்தில் நடக்கும் கதை இது. அதனால் படத்தில் நடிப்பவர்களுக்கு வெரைட்டியான காஸ்ட்யூம்கள் இல்லை என காஸ்ட்யூம் டிசைனர் ஏற்கனவே கூறியிருந்தார்.

Also read... மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜய்

படத்தில் விஜயசேதுபதி வில்லனாக நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. அவரும் கமலும் மோதும் சண்டைக் காட்சியை பிரமாண்டமாக எடுத்துள்ளனர். தற்போது அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளன.

படப்பிடிப்பு நிறைவடைந்ததை கமல், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். அந்த புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். விரைவில் போஸ்ட்புரொடக்ஷன் பணிகளை முடித்து ஏப்ரல் மாதம் படத்தை திரைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளனர்.

First published:

Tags: Actor Vijay Sethupathi, Anirudh, Kamal Haasan, Lokesh Kanagaraj