• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நாயகியாக அறிமுகமாகும் ராஜீவ்மேனன் மகள்!

நாயகியாக அறிமுகமாகும் ராஜீவ்மேனன் மகள்!

மகளுடன் ராஜிவ் மேனன்

மகளுடன் ராஜிவ் மேனன்

ராஜீவ்மேனன் கடைசியாக இயக்கிய ’சர்வம் தாள மயம்’ படத்தில் சரஸ்வதி ஒரு பாடல் காட்சியில் ஆடியிருந்தார்.

  • Share this:
    இந்திய சினிமாவில் இன்னொரு வாரிசு நடிகை உதயமாகிறார். பெயர் சரஸ்வதி, ஒளிப்பதிவாளர், இயக்குனர் ராஜீவ்மேனனின் மகள்.

    இந்திய திரையுலகம் வாரிசுகளால் நிறைந்திருக்கிறது. ஆண்கள் மட்டுமில்லை, பெண் வாரிசுகளும் திரையுலகில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இந்தியில் கரீனா கபூர், சோனம் கபூர், அலியா பட், சாரா அலிகான், ஜான்வி கபூர் என முன்னணி நடிகைகள் அனைவருமே வாரிசுகள்தான்.

    மலையாளத்திலும் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி ப்ரியதர்ஷன் போல சிலர் இருக்கிறார்கள். தமிழில் பாக்யராஜின் மகள் தொடங்கி ஷங்கரின் மகள் அதிதி வரை பலரும் திரையுலகுக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் வரிசையில் ராஜீவ்மேனனின் மகள் சரஸ்வதியும் நடிகையாகிறார்.

    ராஜீவ்மேனன் கடைசியாக இயக்கிய ’சர்வம் தாள மயம்’ படத்தில் சரஸ்வதி ஒரு பாடல் காட்சியில் ஆடியிருந்தார். இப்போது வசந்த் ரவி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமாகிறார்.

    Rajiv Menon's daughter to make debut as a heroine, rajiv menon daughter, rajiv menon siblings, lakshmi menon rajiv menon, rajiv menon and gautham menon relationship, rajiv menon father, kalyani menon husband, rajiv menon assistant director, saraswathi rajiv menon, ராஜீவ் மேனனின் மகள் கதாநாயகியாக அறிமுகமாகிறார், ராஜீவ் மேனன் மகள், ராஜீவ் மேனன் மகள் சரஸ்வதி
    சரஸ்வதி


    வசந்த் ரவி தரமணியில் அறிமுகமானவர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ராக்கி என்ற படத்தில் நடித்துள்ளார். படம் இன்னும் வெளிவராமல் உள்ளது. இந்த அருண் மாதேஸ்வரன் தான் செல்வராகவன் நடித்துள்ள சாணிக்காயிதம் படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: