கார்த்தியை தொடர்ந்து சூர்யாவுடன் நடிக்கும் ரஜிஷா விஜயன்!

கார்த்தியை தொடர்ந்து சூர்யாவுடன் நடிக்கும் ரஜிஷா விஜயன்!

ரஜிஷா விஜயன்

சூர்யா கௌரவ வேடத்தில் தோன்றுகிறார். இதில் அவர் வழக்கறிஞராக நடிப்பதாக கூறப்படுகிறது.

 • Share this:
  அனுராக கருக்கின் வெள்ளம் மலையாளப் படத்தில் அறிமுகமானவர் ரஜிஷா விஜயன். அவர் தமிழில் கார்த்தியை தொடர்ந்து சூர்யாவுடன் நடிக்க உள்ளார்.

  2016-ல் பிஜு மேனன், ஆசிப் அலி, ஆஷா சரத் நடித்த அனுராக கருக்கின் வெள்ளம் திரைப்படத்தில் அறிமுகமானார் ரஜிஷா விஜயன். முதல் படத்திலேயே அவருக்கு கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. தொடர்ந்து மலையாளப் படங்களில் நடித்து வந்தவரை கர்ணன் படத்துக்காக தமிழுக்கு அழைத்து வந்தனர். கர்ணன் ரஜிஷாவின் முதல் தமிழ்ப் படம்.

  அதனைத் தொடர்ந்து கார்த்தியின் சர்தார் படத்தில் ரஜிஷா விஜயன் ஒப்பந்தமானார். பி.எஸ்.மித்ரன் இயக்கும் இந்த ஆக்ஷன் படத்தைத் தொடர்ந்து மேலுமொரு படத்தில் அவர் நடிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
  சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம் தயாராகிறது.

  கூட்டத்தில் ஒருத்தன் படத்தின் இயக்குநர் அதனை இயக்குகிறார். அசோக் செல்வன் அதில் நாயகனாக நடித்திருந்தார். ஞானவேலின் படத்தில் சூர்யா கௌரவ வேடத்தில் தோன்றுகிறார். இதில் அவர் வழக்கறிஞராக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ரஜிஷா விஜயன் ஒப்பந்தமாகியுள்ளார். அவர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: