• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அவரின் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நினைக்கவில்லை- எஸ்.பி.பி குறித்து ரஜினிகாந்த் உருக்கம்

அவரின் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நினைக்கவில்லை- எஸ்.பி.பி குறித்து ரஜினிகாந்த் உருக்கம்

ரஜினிகாந்த், எஸ்.பி.பாலசுப்ரமணியம்

ரஜினிகாந்த், எஸ்.பி.பாலசுப்ரமணியம்

அண்ணாத்த படத்தின் பாடல் வெளியாகியுள்ள நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குறித்து ரஜினிகாந்த் நினைவுகூர்ந்துள்ளார்.

  • Share this:
    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். டி இமான் இசையமைத்துள்ளார். அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிருந்திருந்த நிலையில், தற்போது ‘அண்ணாத்த அண்ணாத்த ’ என்ற பாடல் வெளியாகிவுள்ளது. இந்த பாடலை மறைந்த பாடகர் எஸ். பி.பாலச்சுப்பிரமணியம் பாடியுள்ளார்.

    ரஜினி படங்களில் அவரது அறிமுகப் பாடலை பெரும்பாலும் பாலசுப்பிரமணியமே பாடுவார்.பாட்ஷாவில் வரும் நான் ஆட்டோக்காரன், முத்துவின் ஒருவன் ஒருவன் முதலாளி, அருணாச்சலத்தில் வரும் அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான்தாண்டா. ஆகிய பாடல்கள் ரஜினிக்காக எஸ்.பி.பி பாடிய பாடலாகும்.எஸ்.பி.பி பாடினாலே ஹிட் தான் என்ற பெயர் உள்ளது. அந்த வகையில் அண்ணாத்த படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    இதுகுறித்த ரஜினிகாந்த் ட்விட்டர் பதிவில், ‘45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    ரஜினி நடிப்பில் வெளியாகும் அண்ணாத்த திரைப்படம் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: