நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது திரைப்படத்திற்கு ஜெயிலர் என தலைப்பு வைத்திருக்கின்றனர். இதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஆரம்பமாகிறது.
இந்த நிலையில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார், படத்திற்கான கதைவத பணிகளை இறுதி செய்யும் வேலைகளில் உள்ளார். ரஜினிகாந்தின் 169-வது படத்திற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருந்தாலும் படத்தின் தலைப்பை அறிவிக்காமல் இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் - நெல்சன் இணையும் படத்திற்கு ஜெயிலர் என தலைப்பு வைத்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
அந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் ஜெயிலர் திரைப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதிலும் இளம் வயதில் ரஜினிகாந்தாக, அவர் நடிப்பார் எனவும் தகவல்கள் பரவி வருகின்றன. அதை படக்குழுவினர் இன்னும் உறுதி செய்யவில்லை.
முன்னதாக ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை. அந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன. அதைப்போல் நெல்சன் இயக்கத்தில் இறுதியாக வெளியான பீஸ்ட் திரைப்படமும் வெற்றியடையவில்லை. எ
னவே ஜெயிலர் திரைப்படத்தை வெற்றி ஆக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் ஆகியோர் மும்முரமாக உள்ளனர் என கூறப்படுகிறது.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.