பாடப் புத்தகத்தில் ரஜினி... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்

Web Desk | news18
Updated: June 15, 2019, 4:52 PM IST
பாடப் புத்தகத்தில் ரஜினி... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்
பள்ளிப் பாடப்புத்தகத்தில் ரஜினி
Web Desk | news18
Updated: June 15, 2019, 4:52 PM IST
பள்ளிப் பாடப்புத்தகத்தில் ரஜினிகாந்தின் வரலாறு இடம்பெற்றிருப்பதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜே.அனஸ் நபில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சிறுவயதில் சிரமப்பட்டு உழைத்து முன்னேறி நல்ல நிலைமையை அடைந்தவர்கள் என்ற பட்டியலில் சினிமா நடிகர்களை பாடப்புத்தகத்தில் சேர்த்து வெளியிட்டிருப்பது, மாணவர்களின் மனதில் சரியான எண்ணங்கள் ஏற்படாது. உழைத்து முன்னேறியவர்களின் பட்டியலில் நடிகர் ரஜினிகாந்தை மாணவர்களுக்கு பாடமாகக் காட்டினால் பள்ளி மாணவர் தன்னுடைய வாழ்க்கை முன்னேற்றத்துக்கு ரஜினிகாந்தை முன்னுதாரணமாக வைத்துக் களமிறங்கினால் என்னவாகும்?படிப்பெல்லாம் நமக்குத் தேவையில்லை எப்படியாபது சினிமாவில் சேர்ந்து ரஜினிகாந்தைப் போல முன்னேறிவிட வேண்டும் என்ற எண்ணத்தைத் தான் பள்ளிக் கல்வித்துறை மாணவர்களுக்கு பாடமாக்கியுள்ளது.

உழைத்து முன்னேறுவதற்கு சினிமா ஒன்றுதான் இருக்கிறதா? அறிவியல், விஞ்ஞானம், பொருளாதாரம், வர்த்தகம் என எத்தனை துறைகளில் கஷ்டப்பட்டு முன்னேறியவர்கள் பட்டியல் நீண்டிருக்கும் நிலையில், சினிமா நடிகரை மாணவர்களுக்கு உதாரணமாக பாடப்புத்தக்கத்தில் காட்டுவது பள்ளி மாணவர்களின் பிஞ்சு மனதில் நஞ்சை விதைப்பதற்கு சமமாகும்.

சினிமா நடிகர்களை பாடப்புத்தகத்தில் பாடமாக வைத்து, மாணவர்களின் வாழ்க்கையை திசை மாற்றும் இந்த செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டிக்கிறது.
இதை உடனடியாக பாடப்புத்தகத்தில் இருந்து நீக்க பள்ளி கல்வித் துறைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ பார்க்க: நடிகர் சங்க தேர்தலில் இடியாப்ப சிக்கல்! ரத்தாகிறதா நடிகர் சங்க தேர்தல்?

First published: June 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...