ரஜினிகாந்தின் பேட்ட ரிலீஸ்: வெறிச்சோடிய திரையரங்கம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பேட்ட படத்தில் ஆங்காங்கே அரசியல் வசனங்களும் இடம்பெற்றுள்ளன.

Web Desk | news18
Updated: January 10, 2019, 4:42 PM IST
ரஜினிகாந்தின் பேட்ட ரிலீஸ்: வெறிச்சோடிய திரையரங்கம்
பேட்ட - ரஜினிகாந்த்
Web Desk | news18
Updated: January 10, 2019, 4:42 PM IST
ரஜினிகாந்தின் பேட்ட படம் வெளியான திரையரங்கு ஒன்று கூட்டமின்றி வெறிச்சோடி இருந்தது.

கார்த்திக் சுப்புராஜ் - ரஜினி கூட்டணியில் உருவாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்தக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இன்று வெளியாகியிருக்கும் இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டனாக நடித்துள்ளார். “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” என்ற வசனத்தில் தொடங்கும் பேட்ட படத்தில் “ஒரு நல்லாட்சி எப்படி இருக்குமோ அப்படி தான் இனிமே இந்த ஹாஸ்டல் இருக்கும். புதுசா வருபவர்களை தொறத்துற அரசியல் இங்கு இருந்து தான் தொடங்குது. நான் நல்லவன் தான். ரொம்ப நல்லவன் கிடையாது. ” என்ற அரசியல் வசனங்களும் இடம்பெற்றுள்ளன.தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் ராசிபுரத்தில் சாமுண்டி, விஜயலட்சுமி ஆகிய இரண்டு திரையரங்குகளில் பேட்ட படம் வெளியானது. இந்த இரண்டு திரையரங்குகளிலும் சொற்ப அளவிலேயே கூட்டம் இருந்ததால் திரையரங்கு வெறிச்சோடி காணப்பட்டது.

பேட்டையா? விஸ்வாசமா?... ரசிகர்களின் சாய்ஸ் என்ன? - வீடியோ
Loading...
First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...