• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • லைகா தயாரிப்பில் புதிய படம் இயக்கும் ஐஸ்வர்யா தனுஷ்...!

லைகா தயாரிப்பில் புதிய படம் இயக்கும் ஐஸ்வர்யா தனுஷ்...!

ஐஸ்வர்யா தனுஷ்

ஐஸ்வர்யா தனுஷ்

சுமார் 6 வருட இடைவெளிக்குப் பிறகு ஐஸ்வர்யா தனுஷ் மீண்டும் படம் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இது தயாராகிறது. லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
3, வை ராஜா வை படங்களை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ் அடுத்து லைகா தயாரிக்கும் படத்தை இயக்குகிறார். 

தனது மகள்கள் திரையில் நடிப்பதை விரும்பாதவர் ரஜினி. அதனால், அவரது இரு மகள்களும் இயக்குனர் வேலையை தேர்வு செய்தனர். மூத்த மகள் ஐஸ்வர்யா, தனுஷை திருமணம் செய்த பின் தனுஷை வைத்து 3 படத்தை இயக்கினார். அதில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் இந்திய அளவில் ஹிட்டானது. படமும் அவருக்கு நல்ல பெயரை சம்பாதித்து தந்தது.

அதன் பிறகு கௌதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை படத்தை இயக்கினார். பெரும் பொருட்செலவில் படம் தயாரானது. ஆனால், ஓடவில்லை. 3 படத்தில் கிடைத்த பெயரும் கிடைக்கவில்லை.

இந்தப் படம் 2015 இல் வெளியானது. அதன் பின் 2017 இல் சினிமா வீரன் என்ற டாக்குமெண்ட்ரியை இயக்கினார். சினிமா சண்டைக்கலைஞர்களைப் பற்றிய ஆவணப்படம் இது

Also read... நடுவிரலைக் காட்டும் சிம்பு... வெளியானது மாநாடு டிரெய்லர்!

சுமார் 6 வருட இடைவெளிக்குப் பிறகு ஐஸ்வர்யா தனுஷ் மீண்டும் படம் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இது தயாராகிறது. லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. 3, வை ராஜா வை படங்களை ஐஸ்வர்யா தனுஷே எழுதி இயக்கியிருந்தார். இந்தமுறை சஞ்சீவ் என்பவர் ஸ்கிரிப்ட் பணிகளை கவனிக்கிறார். த்ரில்லர் படமாக இது தயாராகிறது.

மேலதிக தகவல்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: