Home /News /entertainment /

நெட்பிளிக்ஸில் அண்ணாத்த - 21 தினங்களில் ஓடிடியில் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி!

நெட்பிளிக்ஸில் அண்ணாத்த - 21 தினங்களில் ஓடிடியில் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி!

அண்ணாத்த

அண்ணாத்த

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நள்ளிரவு அண்ணாத்த படத்தை 5 மொழிகளில் வெளியிட்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
கொரோனா பெருந்தொற்றைப் பயன்படுத்தி ஓடிடி தளங்கள் இந்தியாவில் கிராமங்களையும் சென்றடைந்தன. ஓடிடியில் படம் பார்க்கிறவர்களின் எண்ணிக்கை கோடிகளில் உயர்ந்துள்ளது. திரையரங்கில் ஒரு படத்தை வெளியிட்டு லாபம் பார்ப்பதைவிட ஓடிடிக்கு படத்தைக் கொடுத்து லாபம் சம்பாதிப்பது எளிதாக இருப்பதால் முன்னணி நடிகர்களின் படங்களே நேரடியாக ஓடிடியில் வெளியாகி வருகின்றன.

படங்களின் திரையரங்கு வெளியீட்டுக்குப் பிந்தைய ஓடிடி உரிமையை வாங்கவும் கடும் போட்டி நிலவுகிறது. ஒரு படம் திரையரங்கில் வெளியாகி 4 வாரங்கள் கழிந்த பிறகே ஓடிடிக்கு தர வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் வற்புறுத்தி வருகின்றனர். மறுபுறம் ஓடிடி தளங்கள், படம் திரையரங்கில் வெளியாகி ஒரே வாரத்தில் ஓடிடிக்கு வந்தால் ஒரு தொகை, இரண்டு வாரங்கள் கழித்து ஓடிடிக்கு வந்தால் ஒரு தொகை என நிர்ணயித்துள்ளன. எவ்வளவு விரைவாக ஓடிடிக்கு வருகிறதோ, அந்தளவுக்கு அதிக தொகை கிடைக்கும்.

அண்ணாத்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸுக்கு சன் நெக்ஸ்ட் என்ற ஓடிடி தளம் உள்ளது. இதனால், வேறு ஓடிடி தளங்களில் அண்ணாத்த வெளியாக வாய்ப்பில்லை என்று கருதினர். ஆனால், அண்ணாத்த படத்தை நெட்பிளிக்ஸில் வெளியிட சன் பிக்சர்ஸ் அனுமதி அளித்துள்ளது. அதுவும் படம் வெளியாகி மூன்று வாரங்களில் படத்தை வெளியிட அனுமதித்துள்ளது. நள்ளிரவு முதல் அண்ணாத்த தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் நெட்பிளிக்ஸில் பார்க்கக் கிடைக்கிறது.

Also read... தொடங்கப்படும் முன்பே விலை பேசப்படும் விஜய் படம்

அண்ணாத்த திரைப்படம் இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. வார இறுதியில் சில திரையரங்குகளில் அரங்குகள் நிறைந்ததாக செய்திகளும் வந்தன. இந்நிலையில், சிம்புவின் மாநாடு வெளியாகும் அதே தினத்தில் நெட்பிளிக்ஸில் அண்ணாத்தயை வெளியிட்டுள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Annaatthe, Rajini Kanth, Rajinikanth Fans

அடுத்த செய்தி