Home /News /entertainment /

முதல்நாளே இணையத்தில் வெளியான அண்ணாத்த... அதிர்ச்சியில் படக்குழு!

முதல்நாளே இணையத்தில் வெளியான அண்ணாத்த... அதிர்ச்சியில் படக்குழு!

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

நேற்று தமிழ்ராக்கர்ஸ், மூவிரூல்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட இணையதளங்களில் படம் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
தீபாவளியை முன்னிட்டு நேற்று அண்ணாத்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. நேற்றே தமிழ் ராக்கர்ஸ் உள்பட பல இணையதளங்களில் முழுப்படமும் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான தர்பார் ரஜினி ரசிகர்களுக்கு முழுமையான அனுபவத்தை தரவில்லை. அவர்கள் அண்ணாத்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனா. சிவா குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுத்த வீரம், விஸ்வாசம் படங்கள் ரசிகர்களை கவர்ந்ததுடன் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றன. அண்ணாத்தயும் குடும்ப சென்டிமெண்டை மையமாகக் கொண்ட படம், விஸ்வாசம் போல் வெற்றி பெறும் என நம்பினர்.

படம் வெளியாவதற்கு முன் தயாரிப்பு தரப்பு, படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடுவதற்கு தடை கேட்டு நீதிமன்றத்தில் மனு செய்தது. நீதிமன்றமும், அண்ணாத்த படத்தை சட்டவிரேதமாக இணையத்தில் வெளியிட தடை விதித்தது.

நேற்று தீபாவளியை முன்னிட்டு அண்ணாத்த படம் வெளியானது. தமிழகமெங்கும் அதிகாலைக் காட்சிகள் திரையிடப்பட்டன. யுகே தவிர்த்த வெளிநாடுகளில் முதல் நாள் காட்சியில் சுமார் 11.5 கோடிகளை படம் வசூலித்ததாக கூறப்படுகிறது. அதேபோல், இந்த வருடம் வெளியான டாக்டர், மாஸ்டர் படங்களின் முதல்நாள் வசூலை அண்ணாத்தா எளிதாக கடந்துள்ளது

Also read... இந்த படத்துக்கு விருது கிடைத்தால் அது விருதுக்கு பெருமை... ஜெய் பீமை பாராட்டிய நடிகர் சூரி!

படம் பார்த்த ரஜினியின் வயதான ரசிகர்கள் படம் நன்றாக இருப்பதாக கூறியுள்ளனர். 40 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு படம் பிடிக்கவில்லை. ஓவர் சென்டிமெண்ட் என குறைபட்டுக் கொண்டிருக்கிறார்கள். தி நியூஸ் மினிட் இணையதளம் படத்துக்கு ஒரு ஸ்டார் மட்டும் தந்துள்ளது. முன்னணி பத்திரிகைகளும் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளன.

இதில் இன்னொரு சோதனையாக நேற்று தமிழ்ராக்கர்ஸ், மூவிரூல்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட இணையதளங்களில் படம் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் வசூல் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Annaatthe, Rajinikanth

அடுத்த செய்தி