சீனாவில் 56,000 திரையரங்குகளில் ரஜினியின் 2.0 வெளியீடு!

News18 Tamil
Updated: June 4, 2019, 10:44 PM IST
சீனாவில் 56,000 திரையரங்குகளில் ரஜினியின் 2.0 வெளியீடு!
2.O படம்
News18 Tamil
Updated: June 4, 2019, 10:44 PM IST
நடிகர் ரஜினிகாந்த் நடித்த பிளாக்பஸ்டர் திரைப்படமான எந்திரன் 2.0 திரைப்படம், சீனாவில் மிக பிரமாண்டமான முறையில் 56 ஆயிரம் திரையரங்குகளில் ஜூலை 12ம் தேதி வெளியாகவுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், எந்திரன் 2.O திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டானது. குழந்தைகள், பெரியவர் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் 550 கோடி ரூபாய் செலவில் தயாரான அந்த Scientific Thriller வசூலை வாரி குவித்தது.

இந்தியாவில் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் உள்பட 15 மொழிகளில் எந்திரன் 2.O திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்தி சூப்பர் ஸ்டாரான அக் ஷய் குமார் நடித்திருந்ததால் இந்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதற்கேற்ப பெரும்வெற்றி பெற்றது. இந்தியில் மட்டும் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலாகி சாதனை படைத்தது.

பாலிவுட் ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்கு பரிச்சியமானவர் என்பதால் இந்தி மட்டுமின்றி போஜ்புரி, பஞ்சாபி போன்ற மொழிகளிலும் எந்திரன் 2.0 பெரும் வெற்றி பெற்றது. அதில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகள், பாடல்கள் மொழிகளைக் கடந்து ரசிகர்கள் மனதைக் கவர்ந்தது.

இந்நிலையில் பாலிவுட்டுக்கு நிகரான திரைச்சந்தையை உடைய சீனாவில் எந்திரன் 2.0 வை வெளியிட லைக்கா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. முதலில் 10 ஆயிரம் சீன திரைகளில் வெளியாக இருந்தது. ஆனால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட ட்வீட்டில் சீனாவில் 56 ஆயிரம் திரைகளில் வெளியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.ரோபோ 2.0 என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம் சீனம் மற்றும் ஆங்கில சப்-டைட்டில்களுடன் வெளியாகிறது.

சீனாவில் கடந்த ஆண்டு வெளியான அமீர்கானின் டங்கல் திரைப்படம் அங்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்தது.

டங்கல் திரைப்படம் போல் எந்திரன் 2.0வும் சீனாவில் சாதனை புரியுமா என்பதே ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

First published: June 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...