ஐரோப்பாவின் மிகப்பெரிய திரையரங்கில் ’2.0’ படைத்த சாதனை

ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய திரையரங்கு ஒன்றில் 2.0 திரைப்படம் 9 நாட்கள் திரையிடப்பட உள்ளது.

news18
Updated: December 4, 2018, 1:27 PM IST
ஐரோப்பாவின் மிகப்பெரிய திரையரங்கில் ’2.0’ படைத்த சாதனை
கிராண்ட் ரெக்ஸ் தியேட்டர்
news18
Updated: December 4, 2018, 1:27 PM IST
ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய திரையரங்கு ஒன்றில் 2.0 திரைப்படம் 9 நாட்கள் திரையிடப்பட உள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்‌ஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.0. 3டி தொழில்நுட்பத்தில், 4 டி ஒலி நுட்பத்தில், ரூ.600 கோடி செலவில், பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

உலகம் முழுவதும் சுமார் 10,000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ள 2.0, ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அக்‌ஷய் குமாரை படம் பார்த்த அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

படம் வெளியாகி 4 நாட்கள் கடந்த நிலையில் இந்தப் படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இது பிளாக் பஸ்டர் அல்ல, மெகா பிளாக் பஸ்டர் என்று பெருமிதமாக ட்வீட் செய்துள்ளது. இதனால், தமிழில் அதிகம் வசூலித்த படம் என்ற பெருமை 2.0 படத்துக்கு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் பாரிஸில் உள்ள கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் 2.0 படம் டிசம்பர் 8-ம் தேதி வரை திரையிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த திரையரங்கம் ஐரோப்பாவில் இருக்கும் மிகப்பெரிய திரையரங்கு என்பதோடு, இதற்கு முன்னதாக விஜய் நடித்த மெர்சல் படமும் இங்கு திரையிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இங்கு அதிக நாட்கள் திரையிடப்படும் தமிழ்ப்படம் என்ற பெருமையை 2.0 பெற்றுள்ளது. இந்த திரையரங்கில் விஜய் நடித்த மெர்சல், பாகுபலி, கபாலி ஆகிய படங்கள் குறைந்த நாட்களே திரையிடப்பட்டுள்ளன.

8000-க்கும் மேற்பட்ட கருக்கலைப்பு செய்த போலி பெண் மருத்துவர் - வீடியோ

First published: December 4, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்