மீண்டும் பத்தாயிரம் திரையரங்குகளில் 2.0 ரிலீஸ்!

news18
Updated: June 3, 2019, 3:21 PM IST
மீண்டும் பத்தாயிரம் திரையரங்குகளில் 2.0 ரிலீஸ்!
2.0 பட போஸ்டர்
news18
Updated: June 3, 2019, 3:21 PM IST
சீனாவில் 10 ஆயிரம் திரையரங்குகளில் ரஜினிகாந்தின் 2.0 திரைப்படம் வெளியாகவுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்‌ஷன் உள்ளிட்டோர் நடிப்பில் பிரமாண்டமாக 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள படம் ‘2.0’. ரூ.600 கோடி செலவில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக் குவித்தது.

சீனாவிலும் ‘2.0’ வெளியாவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில் வரும் ஜூலை மாதம் 12-ம் தேதி அங்கு சுமார் பத்தாயிரம் திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2.0 படத்தின் பாலிவுட் டைட்டிலான ரோபோட் 2.0 என்ற டைட்டிலுடன் சீன மொழியிலும், ஆங்கில சப் டைட்டிலுடனும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சீனாவில் எச்.ஒய் நிறுவனம் வெளியிட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.வெளியான அனைத்து இடங்களிலும் வசூலை வாரிக் குவித்த இந்தப் படம் சீனாவிலும் வசூல் சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

வீடியோ பார்க்க: சூர்யா ஜெயித்த கதை!

First published: June 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...