முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கணவர் மற்றும் மகனுடன் திருச்செந்தூர் முருகனை தரிசித்த ரஜினியின் மகள்…

கணவர் மற்றும் மகனுடன் திருச்செந்தூர் முருகனை தரிசித்த ரஜினியின் மகள்…

சௌந்தர்யா ரஜினிகாந்த்

சௌந்தர்யா ரஜினிகாந்த்

பக்தர்களில் சிலர் சௌந்தர்யாவுடன் இணைந்து செல்பி எடுக்க முற்பட்டனர். அவர்களை உடன் வந்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு காணப்பட்டது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளும் இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த். தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. 38 வயதாகும் சௌந்தர்யா ரஜினிகாந்த் படையப்பா படம் முதற்கொண்டு, திரைத்துறையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சிவகாசி, சண்டைக்கோழி உள்ளிட்ட படங்களில் கிராபிக் டிசைனராக பணி புரிந்துள்ளார்.

கடந்த 2014-ல் ரஜினி நடிப்பில் வெளிவந்த கோச்சடையான் படத்தை சௌந்தர்யா இயக்கினார். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாத நிலையில், அடுத்ததாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தையும் இவர் இயக்கியிருந்தார். இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் விசாகன் மற்றும் மகன் வேத் உடன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

இதுபற்றி அறிந்த அங்கிருந்த பக்தர்களில் சிலர் சௌந்தர்யாவுடன் இணைந்து செல்பி எடுக்க முற்பட்டனர். அவர்களை உடன் வந்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு காணப்பட்டது. சாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு, குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கடலில் கால் நனைத்த சௌந்தர்யா, பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். முன்னதாக சௌந்தர்யா ரஜினிகாந்த் குடும்பத்திற்கு சண்முக விலாசத்தில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. இதன்பின்னர் அவர்கள் மூலவர் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சன்னதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

First published:

Tags: Kollywood, Soundarya Rajinikanth