• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 99 சாங்ஸ் பட ரிலீஸ் - ஏ.ஆர்.ரஹ்மானை வாழ்த்திய ரஜினிகாந்த்!

99 சாங்ஸ் பட ரிலீஸ் - ஏ.ஆர்.ரஹ்மானை வாழ்த்திய ரஜினிகாந்த்!

ஏ.ஆர்.ரஹ்மான் - ரஜினிகாந்த்

ஏ.ஆர்.ரஹ்மான் - ரஜினிகாந்த்

ஏ.ஆர்.ரஹ்மான் தயாரித்து, கதை எழுதி, இசையமைத்துள்ள ‘99 சாங்ஸ்’ திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

  • Share this:
    ஏ.ஆர்.ரஹ்மான் தயாரித்து, கதை எழுதி, இசையமைத்துள்ள ‘99 சாங்ஸ்’ திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    ரஹ்மானின் முதல் தயாரிப்பான 99 சாங்ஸ் படத்தின் கதாசிரியரும் அவரே தான். ‘தி தேவாரிஸ்ட்ஸ்’ மற்றும் ‘பிரிங் ஆன் தி நைட்’ புகழ் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை இயக்கியுள்ளார். திறமைமிக்க நடிகரான ஏஹன் பட்டை ‘99 சாங்ஸ்’ மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார் ரஹ்மான். நடிகை எடில்ஸி வர்காஸுக்கு ஜோடியாக ஏஹன் பட் நடித்துள்ளார்.



    ஜியோ ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ள இத்திரைப்படத்தை ரஹ்மானின் தயாரிப்பு நிறுவனமான ஒய்.எம்.மூவிஸ் ஐடியல் என்டர்டெயின்மென்ட்டுடன் இணைந்து தயாரித்துள்ளது. 99 சாங்ஸ் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு பிரபலங்களும், ரசிகர்களும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.



    இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஏ.ஆர். ரஹ்மானுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “99 சாங்ஸ் பட வெளியீட்டை முன்னிட்டு, உங்களுக்கு எப்போதும் சிறப்பான வாழ்த்துக்கள் ஏ.ஆர்.ரஹ்மான் ஜி. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

    அதற்கு ஏ.ஆர்.ரஹ்மானும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: