• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ரஜினிக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது அக்டோபர் 25ஆம் தேதி வழங்கப்படுகிறது?

ரஜினிக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது அக்டோபர் 25ஆம் தேதி வழங்கப்படுகிறது?

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

25ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
    இந்திய சினிமா வரலாற்றில் மிக உயரிய விருதாக ‘தாதா சாகேப் பால்கே’ விருது கருதப்படுகிறது. 2019ஆம் ஆண்டுக்கான இந்த விருது, நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்ட நிலையில். அவருக்கு அக்டோபர் 25ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே பெயரிலான இந்த விருது, திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. பிரபல நடிகர் சிவாஜிகணேசன், அமிதாப்பச்சன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் இந்த விருதை பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், 2019ஆம் ஆண்டுக்கான ‘தாதா சாகேப் பால்கே விருது’ நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டது. நடிகர் சிவாஜிக்கு பிறகு தமிழ் திரைப்படத்துறையில் இந்த விருதை ரஜினிகாந்த் பெறவுள்ளார். கொரோனா நோய் பரவல் காரணமாக இந்த விருதை அவருக்கு வழங்க முடியாத சூழல் இருந்து வந்தது.

    இந்நிலையில், வருகிற 25ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைப்போல அன்றைய தேதியில் 2019ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளும் வழங்கப்பட உள்ளன.

    இதில் சிறந்த படத்துக்கான தேசிய விருது, ‘மரைக்காயர் அரபிக்கடலின்டே சிம்கம்’ என்ற படத்துக்கு வழங்கப்படுகிறது. சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் தனுசுக்கு வழங்கப்படுகிறது. அசுரன் படத்துக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதைப்போல ‘போன்ஸ்லே’ என்கிற இந்தி படத்தில் சிறப்பான நடிப்புக்காக நடிகர் மனோஜ் பாஜ்பாய், ‘மணிகர்னிகா தி குயின் ஆப் ஜான்சி’ மற்றும் ‘பங்கா’ ஆகிய இந்தி படங்களில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை கங்கனா ரனாவத் ஆகியோரும் தேசிய விருது பெறுகிறார்கள்.

    Must Read : யூ-ட்யூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா அவதூறு வழக்கு

    இந்நிலையில், சிறந்த துணை நடிகருக்கான விருதை விஜய் சேதுபதி பெறுகிறார். ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. மேலும், கண்ணான கண்ணே… பாடலுக்காக டி.இமான் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதையும் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: