பண்டிகைக் காலங்களில் நடிகர்
ரஜினிகாந்த் சென்னையில் இருந்தால் வீட்டிற்கு வரும் ரசிகர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.
கடந்த டிசம்பர் மாதம் அவரது பிறந்த நாளையொட்டி ரசிகர்கள் வீட்டுக்கு வந்திருந்தனர். அப்போது ரஜினிகாந்த் கேளம்பாக்கத்தில் இருந்ததால் ரசிகர்களை சந்திக்க வில்லை. ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினத்தில் தனது வீட்டுக்கு முன்பு நின்று இந்த ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறினார்.
இந்நிலையில் பொங்கல் மற்றும் தமிழர் திருநாளையொட்டி நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க, போயஸ் கார்டன் இல்லத்திற்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இன்று காலை முதல் திரண்டு நின்றனர்.
அப்போது ரஜினிகாந்த் அவரது வீட்டின் கேட் முன்பு நாற்காலி போட்டு அதன் மீது ஏறி நின்று ரசிகர்களுக்கு கையை மட்டும் அசைத்து சென்றார். ரசிகர்கள் சிலர் கொடுத்த புத்தகத்தையும் பெற்றுக் கொண்டார். ரஜினியை பார்த்த மகிழ்ச்சியில், ரசிகர்கள் தலைவா, தலைவா என கோஷம் எழுப்பினர்.
சில வினாடிகள் மட்டுமே வீட்டின் கேட்டின் பின்புறம் நின்று ரசிகர்களை சந்தித்து கையசைத்த நடிகர் ரஜினிகாந்த் பின் வீட்டுக்குள் சென்றார்.
ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ள ரஜினிகாந்த், இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ''அனைவருக்கும் வணக்கம். ஒரு கஷ்டமான, ஒரு ஆபத்தான சூழ்நிலையிலே வாழ்ந்திட்டிருக்கோம்.
இதையும் படிங்க :
ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஜய்யின் பீஸ்ட் அப்டேட்!
இந்த கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிட்டிருக்கு. இதுலேருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள எல்லா கட்டுப்பாடுகளையும், எல்லா நியமங்களையும் கண்டிப்பா கடைபிடிங்க. ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது. அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.'' என்று கூறியுள்ளார். இதேபோன்று பல்வேறு திரை பிரபலங்களும், பொங்கலையொட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க :
கைதி படத்தின் இந்தி ரீமேக் தொடக்கம்!இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.