Home /News /entertainment /

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க விரும்பிய ரஜினிகாந்த்... மறுத்த மணிரத்னம்!

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க விரும்பிய ரஜினிகாந்த்... மறுத்த மணிரத்னம்!

ரஜினிகாந்த் - மணிரத்னம்

ரஜினிகாந்த் - மணிரத்னம்

ஸ்க்ரீன் பிரசன்ஸ் மிகக் குறைவாக இருப்பதால் இது உங்களைப் போன்ற சூப்பர் ஸ்டார் நடிக்கக் கூடிய கதாபாத்திரம் அல்ல என்றார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பொன்னியின் செல்வன் படத்தின் நான் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்டேன், ஆனால் மணிரத்னம் மறுத்து விட்டார் எனத் தெரிவித்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

    'பொன்னியின் செல்வன்' படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் பார்வையாளர்களிடம், மணிரத்னத்துடனான தனது பணி அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

    ”பல வருடங்களுக்குப் பிறகு 'பொன்னியின் செல்வன்' படத்தை உருவாக்கியதற்காக மணிரத்னத்தை பாராட்டினார் ரஜினிகாந்த். "முன்பு, மணிரத்னம் பொன்னியின் செல்வன் படம் எடுக்க வேண்டும் என சொன்ன போது, இது ஒரு அற்புதமான ஐடியா, என்று நான் சொன்னேன். பின்னர் அவர் நீங்கள் அந்த புத்தகத்தை படித்திருக்கிறீர்களா என்று கேட்டார். நான் மன்னிக்கவும், இல்லை என்று சொன்னேன். பிறகு படிக்க வேண்டும் என்று நினைத்தேன். மணிரத்னம் 2500 பக்கங்கள் என்று சொன்னார். சிரித்துவிட்டு நான் படிக்கவே வழியில்லை என்று இருந்தேன். பின்னர் சில வருடங்கள் கழித்து படிக்கலாம் என்று முடிவு செய்தேன். நான் படிக்கும் போது கல்கி உயிருடன் இருந்திருந்தால் நான் அவர் காலில் விழுந்திருப்பேன்" என்று ரஜினிகாந்த் கூறினார்.

    மேலும் பேசிய ரஜினிகாந்த், 'பொன்னியின் செல்வன்' படத்தில் தான் நடிக்க விரும்பியதாகவும், ஆனால் மணிரத்னம் மறுத்துவிட்டார் எனவும் குறிப்பிட்டார். 2019-ல் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை அறிவித்தபோது, நான் அவரை அழைத்து பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நான் நடிக்கட்டுமா எனக் கேட்டேன். அதற்கு வேண்டாம் என திட்டவட்டமாகச் சொல்லி, என் ரசிகர்கள் அவரைத் திட்ட வேண்டுமா என்று கேட்டார்.

    குழந்தை கட்டாயம் வேணும்... திருமணத்திற்கு முன்பு ரவீந்தருக்கு கண்டிஷன் போட்ட மகாலட்சுமி!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஸ்க்ரீன் பிரசன்ஸ் மிகக் குறைவாக இருப்பதால் இது உங்களைப் போன்ற சூப்பர் ஸ்டார் நடிக்கக் கூடிய கதாபாத்திரம் அல்ல என்றார். இருந்தாலும் பரவாயில்லை நான் அதில் நடிக்கிறேன் எனக் கேட்டபோது, நான் இன்னும் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் எனவும், சிறிய வேடத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் என்னை சமாதானப்படுத்தினார். வேறு யாராக இருந்தாலும் என்னுடைய கோரிக்கையை ஏற்றிருப்பார்கள். அதுதான் மணிரத்னம்” என்றார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Mani ratnam, Ponniyin selvan, Rajinikanth

    அடுத்த செய்தி