நடிகர் ரஜினிகாந்த்தின் 72வது பிறந்த நாள் கடந்த திங்களன்று அவரது ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ரஜினிக்கு வாழ்த்து சொல்ல அவரது வீட்டு முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அப்போது ரஜினிகாந்த் வீட்டில் இல்லை என அவரது மனைவி லதா ரசிகர்களிடம் தெரிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துடன் சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து ரஜினிகாந்த் ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள புகழ்பெற்ற அமீன் தர்காவுக்கு சென்று வழிபட்டுள்ளார்.
#JUSTIN: ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள பிரசித்தி பெற்ற அமீன் தர்காவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் சென்ற ரஜினிகாந்த்#Rajinikanth #ARR #ARRahman #News18TamilNadu | https://t.co/7dpn9FkRRJ pic.twitter.com/Iwi2Z5IrNz
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 15, 2022
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஒரே நாளில் இந்து கோவிலுக்கும், முஸ்லீம் தர்காவுக்கும் சென்று ரஜினிகாந்த் மத நல்லிணக்கத்தை வலியுறுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ள லால் சலாம் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். நாயகர்களாக விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் நடிக்கவிருக்கின்றனர். இதற்கான அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.