நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு அழைக்கப்பட்டுள்ள பிரபலங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
பிரபல தென்னிந்திய நடிகை நயன்தாரா 'நானும் ரவுடி தான்' இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வரும் விஷயம் அனைவரும் அறிந்ததே. தற்போது இருவரும் தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளனர். அவர்களின் திருமண வரவேற்பிற்கு ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட 30 பிரபலங்கள் அழைக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.
நயன்தாரா பல முன்னணி ஹீரோக்களுடன் பணிபுரிந்துள்ளார், அதே நேரத்தில் விக்னேஷ் சிவனுக்கு சினிமா துறையில் அதிக நண்பர்கள் உள்ளனர். எனவே, ஜூன் 8ம் தேதி மாலை சென்னையில் நடக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு பல நட்சத்திரங்களை அழைக்க இருவரும் திட்டமிட்டுள்ளனராம்.
திருக்கடையூர் கோயிலில் இளையராஜாவுக்கு சதாபிஷேகம் - பாரதிராஜா பங்கேற்பு!
ஜூன் 8ஆம் தேதி நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு 30 பிரபலங்கள் உட்பட கிட்டத்தட்ட 200 பேரை அழைக்க திட்டமிட்டுள்ளார்களாம். ரஜினிகாந்த், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், நயன்தாராவும், விக்னேஷ் சிவனும், மகாபலிபுரத்தில் ஜூன் 9-ம் தேதி அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் நடக்கும் தங்கள் திருமணத்திற்கு குறிப்பிட்ட நபர்களை மட்டுமே அழைத்துள்ளனராம். இருப்பினும் இந்த ஜோடி தங்களது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் சமீப காலங்களில் தமிழகத்தின் பிரபலமான கோயில்களுக்கு சென்று வந்தனர். அந்தப் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்தன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Nayanthara, Vignesh Shivan