Rajinikanth: சிகிச்சைக்காக நாளை மறுநாள் அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த்

கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ள ரஜினி, இதற்காக மத்திய அரசிடம் சிறப்பு அனுமதியும் கோரி இருந்தார்.

  • Share this:
    நடிகர் ரஜினிகாந்த வரும் 19-ம் தேதி அமெரிக்கா செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிக்கின்றன.

    தர்பார் படத்துக்குப் பிறகு ரஜினி நடித்துவரும் படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். படத்தில் நயன்தாரா ரஜினியின் ஜோடியாகவும், கீர்த்தி சுரேஷ் அவரது தங்கையாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. குஷ்பு, மீனா, ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு இசை டி.இமான் இசை.

    நீண்ட நாள்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் குடும்பப் பின்னணி கொண்ட கதையில் நடித்துள்ளார். வீரம், விஸ்வாசம் படங்களில் கூட்டுக் குடும்பப் பின்னணியை அழகாகக் காட்டியிருந்த சிவா, அண்ணாத்த படத்தையும் சிறப்பாக எடுத்திருப்பார் என்கிறார்கள் ரசிகர்கள். படத்தின் மேற்படி வேலைகளை முடித்து தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜூன் 19-ம் தேதி அமெரிக்க செல்லவிருக்கிறார். அங்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அவர், சிறிது நாட்கள் அங்கு ஓய்வெடுக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

    கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ள ரஜினி, இதற்காக மத்திய அரசிடம் சிறப்பு அனுமதியும் கோரி இருந்தார். தற்போது மத்திய அரசு அதற்கு அனுமதியளித்ததைத் தொடர்ந்து நாளை மறுநாள் அவர் அமெரிக்க செல்லவிருக்கிறார். ரஜினியுடன் அவரது குடும்பத்தினரும் செல்லவிருக்கிறார்கள். குறைந்தது 1 மாதம் அவர் அமெரிக்காவில் இருப்பார் எனத் தெரிகிறது. ரஜினி மீண்டும் சென்னை திரும்பிய பின்னர் அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தவிர, ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், அவரது கணவர் தனுஷும் சில மாதங்களாகவே அமெரிக்காவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: