ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Rajinikanth: முக்கியப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த்?

Rajinikanth: முக்கியப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த்?

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க அதர்வா உள்ளிட்ட சில இளம் நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடிகர் ரஜினி நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

  நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 60% முடிவடைந்துள்ளது. தீபாவளி பிரேக்கிற்குப் பிறகு மீண்டும் இதன் படப்பிடிப்பு துவங்கி நவம்பர் இறுதியில் முடிவடையும் எனக் கூறப்படுகிறது.

  இதையடுத்து ரஜினியின் 170-வது படத்தை 'டான்' பட புகழ் சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளதாகவும், 'தலைவர் 171' படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மூன்றாவது படத்தை இயக்கவுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

  எனெர்ஜியையும் புத்துணர்ச்சியையும் தந்தார்... விஜய்யுடனான சந்திப்பு குறித்து மனோபாலா பெருமிதம்!

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க அதர்வா உள்ளிட்ட சில இளம் நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். இதற்கிடையே கதையை ரஜினியிடம் விவரித்த ஐஸ்வர்யா, அவரை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க கோரிக்கை வைத்துள்ளாரம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Shalini C
  First published:

  Tags: Rajinikanth