ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பி வாசுவுடன் மீண்டும் கைகோக்கும் ரஜினி..? தீயாய் பரவும் தகவல்!

பி வாசுவுடன் மீண்டும் கைகோக்கும் ரஜினி..? தீயாய் பரவும் தகவல்!

ரஜினிகாந்த் - பி.வாசு

ரஜினிகாந்த் - பி.வாசு

பணக்காரன், மன்னன், சந்திரமுகி, குசேலன் என நான்கு படங்களில் இவர்கள் ஏற்கனவே இணைந்து பணிபுரிந்திருக்கிறார்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் பி.வாசுவுடன் ரஜினிகாந்த் கைகோர்க்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், வசந்த்ரவி, வினாயகன், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா ஹீரோயினாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதற்கிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடிக்கிறார் ரஜினிகாந்த். கிரிக்கெட்டை மையப்படுத்தி இயக்கப்படும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இதற்கடுத்து டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் ரஜினி நடிப்பதாகக் கூறப்பட்ட நிலையில், பின்னர் பிரதீப் ரங்கநாதனின் படத்தில் அவர் நடிக்கவிருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் பி.வாசு-வுடன் மீண்டும் ரஜினி கைகோர்க்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பணக்காரன், மன்னன், சந்திரமுகி, குசேலன் என நான்கு படங்களில் இவர்கள் ஏற்கனவே இணைந்து பணிபுரிந்திருக்கிறார்கள். இதில் குசேலன் படத்தை தவிர மற்ற படங்கள் பெரும் வெற்றி பெற்றன.

அருள்நிதி படத்தில் ராஜா ராணி 2 அர்ச்சனா!

இதற்கிடையே பி.வாசு தற்போது சந்திரமுகி 2 படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Rajinikanth