ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மீண்டும் பி.வாசுவுடன் இணையும் ரஜினிகாந்த்?

மீண்டும் பி.வாசுவுடன் இணையும் ரஜினிகாந்த்?

ரஜினிகாந்த் - பி.வாசு

ரஜினிகாந்த் - பி.வாசு

ரஜினிகாந்த் இன்னும் தனக்கான ஸ்கிரிப்டைத் தேர்ந்தெடுக்காததால் யாருடன் கைகோர்ப்பார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரஜினி அடுத்ததாக பி.வாசு இயக்கும் படத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார்  இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் ரஜினிகாந்த். அதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படமும் ஒன்று. தற்போது, ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படமான ‘தலைவர் 171’ படத்தை இயக்குநர் பி.வாசு இயக்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும், படத்தை பி வாசு இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் இதற்கு முன்பு ரஜினிகாந்துடன் ‘பணக்காரன்’, ‘மன்னன்’, ‘சந்திரமுகி’, ‘குசேலன்’ ஆகிய படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளார். பி வாசு தற்போது ராகவா லாரன்ஸுடன் ‘சந்திரமுகி 2’ படப்பிடிப்பில் இருக்கிறார். மேலும் ரஜினிகாந்துக்கு ஸ்கிரிப்ட் தயார் செய்யும் பொருட்டு, சந்திரமுகி 2 படப்பிடிப்பில் இருந்து ஒரு சிறு இடைவெளி எடுத்துக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வாரிசு படத்தில் குஷ்பு எங்கே? கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்

வேலையைப் பொறுத்தவரை ரஜினிகாந்த், 'ஜெயிலர்' படப்பிடிப்பிற்குப் பிறகு, இளம் இயக்குனர்களில் ஒருவரான பிரதீப் ரங்கநாதன் அல்லது சிபி சக்ரவர்த்தியுடன் இணைவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும், அவர் இன்னும் தனக்கான ஸ்கிரிப்டைத் தேர்ந்தெடுக்காததால் யாருடன் கைகோர்ப்பார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. வரும் நாட்களில் சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Rajinikanth