Home /News /entertainment /

Thalaivar 169: நெல்சன் திலீப் குமாருக்கு வழங்கிய வாய்ப்பை வாபஸ் வாங்கிய ரஜினிகாந்த்?

Thalaivar 169: நெல்சன் திலீப் குமாருக்கு வழங்கிய வாய்ப்பை வாபஸ் வாங்கிய ரஜினிகாந்த்?

நெல்சன் - ரஜினிகாந்த்

நெல்சன் - ரஜினிகாந்த்

சந்திரமுகி என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த பி.வாசு, குசேலனில் தடம் மாறி தோல்வி கண்டார். அதன் பிறகு வாசுவை கண்டுக்கொள்ளவே இல்லை ரஜினி

    இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்துவிட்டதாக பேச்சுகள் எழுந்துள்ளன.

    நயன்தாரா கதாநாயகியாக நடித்த ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நெல்சன். இதையடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். கொரோனாவுக்கு மத்தியிலும் அப்படம் பெரியளவில் வசூலை குவித்தது.

    டாக்டர் படம் ரிலீஸாவதற்கு முன்பே விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்க ஒப்பந்தமானார். இந்தப் படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். அனிருத் இசையமைத்த அந்தப் படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து பீஸ்ட் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்தது.

    பீஸ்ட் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்தப் படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 169 எனப் பெயரிடப்பட்டது.

    இந்நிலையில் கடந்த வாரம் நெல்சன் - விஜய் கூட்டணியில் உருவான பீஸ்ட் திரைப்படம் வெளியானது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை என விஜய் ரசிகர்களே கூறினர். விமர்சகர்கள் பலர் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை வழங்கினர். அனைத்தையும் தாண்டி, விஜய்க்காக பலர் படத்தினை பார்த்தனர். பீஸ்ட் படத்தின் விமர்சனங்களை பார்த்தவர்கள் நெல்சனுக்கு ரஜினி படத்தின் வாய்ப்பு பறிபோகும் என கருத்துத் தெரிவித்தனர்.

    கை, கால் வரல... பேசவும் முடியல... சின்னத்திரை பிரபலம் ப்ரீத்தா ராகவ் கண்ணீர்

    ரஜினியை பொறுத்தவரை எப்போதும் ஜெயிக்கும் குதிரை மேல் தான் பந்தயம் கட்டுவார். உதாரணத்திற்கு ரஜினியின் பாட்ஷா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா, மீண்டும் அவரை வைத்து பாபாவை இயக்கினார். இந்த கதை முழுவதும் ரஜினியுடையது என்றாலும், படத்தின் தோல்விக்குப் பிறகு சுரேஷ் கிருஷ்ணாவை டீலில் விட்டார் ரஜினி.

    பாகுபலி 2 சாதனை உடைப்பு - வசூலை அள்ளும் கேஜிஎப் சேப்டர் 2!

    சந்திரமுகி என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த பி.வாசு, குசேலனில் தடம் மாறி தோல்வி கண்டார். அதன் பிறகு வாசுவை கண்டுக்கொள்ளவே இல்லை ரஜினி. முத்து, படையப்பா போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார், அடுத்ததாக ரஜினியை வைத்து இயக்கிய லிங்கா தோல்வியை தழுவியது. அதோடு ரவிக்குமாருக்கு அடுத்த வாய்ப்பு கொடுப்பதைப் பற்றி யோசிக்கவே இல்லை ரஜினி.

    இதை வைத்துப் பார்க்கும் போது நெல்சன் திலீப் குமாருக்கு ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு திரும்பப் பெறப்படலாம் என்கின்றன கோலிவுட் வட்டாரங்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Nelson dilipkumar, Rajinikanth

    அடுத்த செய்தி