ரஜினி நடிக்கும் அடுத்தப் படமான தலைவர் 169 குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
ரஜினி படத்தை யார் இயக்குகிறார்கள், யார் தயாரிக்கிறார்கள் என்பது எப்போதுமே பிரேக்கிங் செய்தியாகவே இருந்து வந்திருக்கிறது. அவரது முந்தைய படம் அண்ணாத்தயை சிறுத்தை சிவா இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரித்தது. சென்ற வருடம் தீபாவளிக்கு அண்ணாத்த வெளியானது.
இதையடுத்து அவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கிறார் என கூறப்பட்டது. பிறகு இளையராஜா தயாரித்து இசையமைக்கும் படத்தில் நடிக்கிறார், பால்கி இந்தத் திரைப்படத்தை இயக்குகிறார் என்றனர். இந்நிலையில் கோலமாவு கோகிலா, டாக்டர் வெற்றி படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியது.
Valimai Trailer: பக்கா மாஸாக வெளியான அஜித்தின் வலிமை ட்ரைலர்!
இருப்பினும் ரஜினியின் அடுத்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாததால் குழப்பத்தில் ஆழ்ந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது மீனா இல்ல... ரஜினிகாந்த் தூக்கி வைத்திருக்கும் இந்த பிரபலம் யார் தெரியுமா?
இந்துக்கள் மனதை புண்படுத்தியதாக பிக் பாஸ் 5 பெண் பிரபலம் மீது புகார்
அதில் ரஜினியின் அடுத்தப்படமான தலைவர் 169 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குவதாகவும், அந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸாவதற்கு முன்பே நெல்சன் திலீப் குமாருடன் பீஸ்ட் படத்தில் ஒப்பந்தமானார் விஜய். தற்போது பீஸ்ட் வெளியாகாத நிலையில் தற்போது தலைவர் 169 படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் ரஜினி.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.