முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கையில் தாமரையுடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!

கையில் தாமரையுடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

  • Last Updated :

நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இன்றுடன் ‘பிலவ’ வருடம் முடிந்து ‘சுப கிருது’ ஆண்டு பிறந்துள்ளது. இதனை மக்கள் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து திரைப்பிரபலங்களும், அரசியல்வாதிகளும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள தனது வீட்டின் வாசலுக்கு இன்று வந்த நடிகர் ரஜினிகாந்த் வாசலுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

பீஸ்ட் ரசிகர்கள் காட்சிக்கே ஆள் இல்லாமல் காற்று வாங்கிய திரையரங்கம்

நடிகர் ரஜினிகாந்தை பார்த்த ரசிகர்கள் ‘தலைவா... தலைவா...’ என கோஷம் எழுப்பி ஆரவாரத்தில் ஈடுபட்டனர். அப்போது ரசிகர் ஒருவர் தன் கையில் வைத்திருந்த தாமரை மலரை ரஜினியிடம் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட ரஜினி, தாமரையை கையில் வைத்தவாறே ரசிகர்களுக்கு டாட்டா காட்டினார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Thalapathy Vijay, Beast