• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அண்ணாத்த தெலுங்கு திரையரங்கு உரிமை சோல்ட் அவுட்...!

அண்ணாத்த தெலுங்கு திரையரங்கு உரிமை சோல்ட் அவுட்...!

அண்ணாத்த

அண்ணாத்த

அண்ணாத்தயின் தெலுங்கு திரையரங்கு உரிமையை கடும் போட்டிக்கு நடுவில் ஏசியன் சினிமாஸ் வாங்கியுள்ளது. மிகப்பெரிய தொகை படத்துக்கு கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ரஜினியின் அண்ணாத்த படத்தின் தெலுங்கு திரையரங்கு உரிமை மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அண்ணாத்த தயாராகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி நடித்திருக்கும் கிராமத்துக்கதையிது. ஆக்ஷனுடன், குடும்ப சென்டிமெண்ட்கள் நிறைந்த படம். வீரம், விஸ்வாசம் போன்ற கிராமத்துப் பின்னணியில் அமைந்த குடும்பப் படங்கள் வெற்றி பெற்றதால் அதே ஃபார்முலாவில் அண்ணாத்தயை சிவா எடுத்துள்ளார்.

ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். டி.இமான் இசை. இன்று மாலை படத்தின் டீசரை வெளியிடுகின்றனர். தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 வெளியாகும் படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

Also read... ராணாவுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

அண்ணாத்தயின் தெலுங்கு திரையரங்கு உரிமையை கடும் போட்டிக்கு நடுவில் ஏசியன் சினிமாஸ் வாங்கியுள்ளது. மிகப்பெரிய தொகை படத்துக்கு கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஏசியன் சினிமாஸின் நாராயண்தாஸ் நரங், சுரேஷ் பாபு இருவரும் பிரமாண்டத்துக்கு பெயர் போனவர்கள். தீபாவளிக்கு தெலுங்கின் முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதால் ஆந்திரா, தெலுங்கானாவில் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் படத்தை வெளியிடுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: