ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரஜினி காந்த் - எஸ்.பி.பி. பயணத்தில் பதிவான வெற்றிப் பாடல்கள்!

ரஜினி காந்த் - எஸ்.பி.பி. பயணத்தில் பதிவான வெற்றிப் பாடல்கள்!

ரஜினிகாந்த் - எஸ்பிபி

ரஜினிகாந்த் - எஸ்பிபி

படையப்பா திரைப்படத்தில் இடம்பெற்ற துவக்க பாடலான என் பேரு படையப்பா பாடலின் சாயலை ஒத்திருப்பதாகவும் தற்பொழுது விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  45 ஆண்டுகளாக என் என் குரலாக ஒலித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் எனக்காக பாடிய கடைசி பாடல் இது என கனவிலும் நான் நினைக்கவில்லை என ரஜினிகாந்த் கூறியிருப்பது ரஜினிகாந்திற்கும், எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கும் இடையிலான நீண்ட நெடிய பயணத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. இந்த பயணத்தில் பதிவான சில வெற்றிப் பாடல்களை தற்போது பார்க்கலாம்.

  இமான் இசையில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த, திரைப்படத்தின் துவக்க பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே பல லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ள இந்த பாடல், தற்போது வானொலி, தொலைக்காட்சி, இணையதளம் என ட்ரெண்டிங்கில் அசத்தி வருகிறது.

  எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் கடைசி பாடல் இது என்பதால், இந்த பாடல் கேட்கும் ரசிகர்களுக்கு சற்று நெகிழ்ச்சிகரமாக அமைந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்திற்கு தெலுங்கு திரைப்படங்களில் ஆரம்ப காலகட்டத்தில் டப்பிங் பேசியது எஸ் பி பாலசுப்ரமணியம் தான். இதனால் ரஜினிகாந்தின் பாடல்களில் மட்டுமல்லாது படத்திலும் அவரது குரலாக ஒலித்த ஒருவர் எஸ்பி பாலசுப்ரமணியம். இதன் காரணமாக ரஜினிகாந்திற்கு மிகவும் உருக்கமான மனதிற்கு நெருக்கமான ஒரு பாடலாக அண்ணாத்த பாடல் மாறியுள்ளது. மை நேம் இஸ் பில்லா என பில்லா திரைப்படத்தில் ரஜினிகாந்தின் நேர்த்தியான உடல் மொழிக்கு, எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் கம்பீரக் குரல் வலுசேர்க்க ரஜினியின் தத்துவ பாடல்கள் அனைத்தையும் எஸ்பி பாலசுப்ரமணியம் தான் பாடவேண்டும் என்ற சூழல், தமிழ் சினிமாவில் உருவானது.

  படையப்பா,பாட்ஷா முத்து, கோச்சடையான், அருணாச்சலம், சந்திரமுகி என ரஜினியின் வெற்றிப் படங்கள் அத்தனையிலும் ரசிகர்கள் விசிலடித்து கைதட்டி கொண்டாடிய துவக்க பாடல்கள் எஸ் பி பாலசுப்பிரமணியம் அலங்கரித்த பாடல்கள். கம்பீரமான துவக்க பாடல்கள் மட்டுமல்லாது தம்பிக்கு எந்த ஊரு திரைப்படத்தில் காதலின் தீபமொன்று வீரா திரைப்படத்தில் கொஞ்சி கொஞ்சி, தில்லு முல்லு திரைப்படத்தில் ராகங்கள் பதினாறு என மெல்லிசை பாடல்களிலும் ரஜினியின் நடிப்பிற்கு தனது குரலால் வலு சேர்த்தவர் எஸ் பி பாலசுப்ரமணியம்.

  பாலசுப்ரமணியம் குரல் இல்லாது ரஜினியின் திரைப்படங்கள் இல்லை என்ற சூழல் நிலவி வந்த நிலையில் கபாலி, காலா உள்ளிட்ட திரைப்படங்களில் எஸ்பிபி குரல் இல்லாமல் நடித்தார் ரஜினிகாந்த். இது பல்வேறு தரப்பிற்கும் முழுமையற்ற ஒரு உணர்வை ஏற்படுத்த மீண்டும் பேட்ட, தர்பார் என ரஜினி நடித்த திரைப்படங்களில் கம்பீரமாக ஒலித்தது எஸ் பி பாலசுப்ரமணியம் குரல்.

  இந்நிலையில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் துவக்க பாடலையும் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடிய நிலையில், கடந்த ஆண்டு எஸ் பி பாலசுப்ரமணியம் இந்த மண்ணை விட்டு மறைந்தார். எஸ் பி பாலசுப்ரமணியம் பாடும் கடைசி பாடல் இது என்ன பாடலை பதிவு செய்து இசையமைப்பாளர் இமான் உள்ளிட்ட யாரும் நினைத்துக்கூட பார்க்காத நிலையில், அண்ணாத்த பாடல் அனைவருக்கும் உணர்ச்சிகரமான ஒரு பாடலாக மாறியது.

  இது ஒருபுறம் இருக்க மறுபுறம் இந்த பாடல் படையப்பா திரைப்படத்தில் இடம்பெற்ற துவக்க பாடலான என் பேரு படையப்பா பாடலின் சாயலை ஒத்திருப்பதாகவும் தற்பொழுது விமர்சனங்கள் எழுந்து வருகிறது. என் பேரு படையப்பா பாடலின் தாக்கம் இருந்தாலும் இந்த பாடல் ரசிகர்களை ஆட்டம் போட செய்துள்ளதால் அண்ணாத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு இந்த பாடலும் முக்கியமான ஒரு காரணமாக மாறி உள்ளது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Rajinikanth, SP Balasubrahmanyam