சிவா - ரஜினிகாந்த் இணையும் படத்துக்கு இசையமைப்பாளர் இவரா?

news18
Updated: August 13, 2019, 5:25 PM IST
சிவா - ரஜினிகாந்த் இணையும் படத்துக்கு இசையமைப்பாளர் இவரா?
ரஜினிகாந்த் | இயக்குநர் சிவா
news18
Updated: August 13, 2019, 5:25 PM IST
சிவா - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகின்றன. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.

இந்நிலையில் பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் படத்தைப் பார்த்து ரசித்த ரஜினிகாந்த், சிவாவை அழைத்து பாராட்டு தெரிவித்தார். இதையடுத்து ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்குநர் சிவா இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளதாகவும், கிராமப்புறத்தை மையமாக வைத்து பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி அவர் இசையமைத்தால் ரஜினிகாந்த் - யுவன் சங்கர்ராஜா இணையும் முதல்படமாக அமையும்.

இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

வீடியோ பார்க்க: ரஜினியின் அரசியல் தர்பார்

First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...