சூர்யா படத்திற்காக ஒன்று சேரும் ரஜினி, ஷங்கர், வைரமுத்து

காப்பான் படத்தில் இருந்து ‘சிரிக்கி’ என்ற பாடல் ஜுலை 5-ம் தேதியும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Web Desk | news18
Updated: July 17, 2019, 6:38 PM IST
சூர்யா படத்திற்காக ஒன்று சேரும் ரஜினி, ஷங்கர், வைரமுத்து
காப்பான்
Web Desk | news18
Updated: July 17, 2019, 6:38 PM IST
காப்பான் படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் சங்கர், பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

சூர்யா, இயக்குநர் கே.வி.ஆனந்த் 3-வது முறையாக காப்பான் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். மோகன்லால் இந்திய பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர். ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜூன் மாதம் 14-ம் தேதி படத்தின் டீசரும்,  ‘சிரிக்கி’ என்ற பாடல் ஜுலை 5-ம் தேதியும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


இந்நிலையில், படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. சூர்யாவின் பிறந்தநாள் வரும் ஜூலை 23-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அவர் பிறந்தநாளுக்கு பரிகாக அளிக்க காப்பான் படத்தின் ஆடியோ ஜூலை 21-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

காப்பான் படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் சங்கர், பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த தகவலை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.ஜூலை 21-ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமசந்திரா கான்வெக்‌ஷன் சென்டரில் ( SRI RAMACHANDRA CONVECTION CENTRE) ஆடியோ வெளியிட்டு விழா நடைபெறுகிறதுAlso watch

First published: July 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...