ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரஜினியின் பாபா திரைப்படம் மீண்டும் ரிலீஸாகும் தேதியை அறிவித்த இயக்குனர்… எதிர்பார்ப்பில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்

ரஜினியின் பாபா திரைப்படம் மீண்டும் ரிலீஸாகும் தேதியை அறிவித்த இயக்குனர்… எதிர்பார்ப்பில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்

பாபா படத்தில் ரஜினிகாந்த்

பாபா படத்தில் ரஜினிகாந்த்

பாபா படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை டால்பி முறையில் சவுண்ட் மிக்ஸிங் செய்யப்படவுள்ளன. விறுவிறுப்பான காட்சிகளுக்காக படத்தின் நீளமும் குறைக்கப்படவுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரஜினியின் பாபா திரைப்படம் மீண்டும் ரிலீஸாகும் தேதியை படத்தின் இயக்குனரான சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

ரஜினியின் சினிமா கெரியரில் அவர் நடித்த பாபா திரைப்படத்திற்கு முக்கிய இடம் உண்டு. அவரது பாஷா, வீரா, அண்ணாமலை உள்ளிட்ட படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா பாபா படத்தை இயக்கியிருந்தார்.

பாபா படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் படத்தையும் ரஜினிகாந்த் தயாரித்திருந்தார். இதன் மூலம் இந்த படத்திற்கு ரஜினி அளித்த முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம். இந்தப் படம் 2002 ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது.

பாபாவில் ரஜினிக்கு ஜோடியாக அப்போது முன்னணி நடிகையாக இருந்த மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். கவுண்டமணி, சுஜாதா, ஆசிஷ் வித்யார்த்தி, நம்பியார், விஜயகுமார், சாயாஜி ஷிண்டே, டெல்லி கணேஷ், கருணாஸ், ரியாஸ் கான் உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றிருந்தனர்.

பாலியல் வழக்கில் சிக்கிய ஸ்க்விட் கேம் சீரிஸ் நடிகர்!

ஏ.ஆர். ரகுமான் இசையில் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. பின்னணி இசை படத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. முதல் பாதியில் அதிரடி சண்டை, காதல், காமெடி என மசாலா படமாக சென்ற பாபா, இரண்டாம் பாதியில் இமயமலைக்கு செல்வது, வரங்களை பயன்படுத்துவது என விறுவிறுப்பாக அமைந்தது.

முந்தைய ரஜினி படங்களில் இருந்து மாறுபட்டு பாபா படம் வெளியான நிலையில், படத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர். படத்தில் அவர் காட்டும் பாபா முத்திரை, இன்றளவும் ரஜினியின் தனி அடையாளமாக இருந்து வருகிறது.

மஞ்சக்காட்டு மைனா..! புடவையில் சொக்க வைக்கும் புன்னகை அரசி சினேகா

இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் பாபா படத்தை நவீன தொழில் நுட்பத்துடன் எடிட் செய்து, மீண்டும் திரைக்கு கொண்டுவர பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் பாபா படத்தின் ஒவ்வொரு காட்சியும், தற்போதைய தொழில்நுட்பத்தின்படி கலரிங் செய்யப்படும் என்றும், பாடல்கள் மற்றும் பின்னணி இசை டால்பி முறையில் சவுண்ட் மிக்ஸிங் செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்று முன்பு வெளியான பாபா படத்தில் இடம்பெறாத காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பாபா படத்தை ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதியையொட்டி வெளியிட திட்டமிட்டுள்ளதாக படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா கூறியுள்ளார்.

First published:

Tags: Rajinikanth