முதல்வரின் பேச்சுக்கு ’நோ கமெண்ட்ஸ்’ சொன்ன ரஜினிகாந்த்!

news18
Updated: November 10, 2019, 7:22 PM IST
முதல்வரின் பேச்சுக்கு ’நோ கமெண்ட்ஸ்’ சொன்ன ரஜினிகாந்த்!
ரஜினிகாந்த்
news18
Updated: November 10, 2019, 7:22 PM IST
தமிழகத்தில் ஆளுமையான, சரியான தலைமைக்கு வெற்றிடம் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கும் நிலையில் அவரது கருத்துக்கு பதில் கூற விரும்பவில்லை என்று கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

கடந்த வெள்ளிக்கிழமை ராஜ் கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், அங்கு நிறுவப்பட்டிருந்த இயக்குநர் கே.பாலச்சந்திரின் மார்பளவு சிலையை நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீடு திரும்பிய ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் வீட்டின் முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் ஆளுமையான, சரியான தலைமைக்கு இன்னும் வெற்றிடம் இருக்கிறது என்றார். பேட்டி கொடுத்த சில நிமிடங்களில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ரஜினியின் பேச்சுக்கு எதிர்வினையாற்றத் தொடங்கினர்.


இந்நிலையில் ரஜினிகாந்தின் கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விக்கிரவாண்டியில் அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் பேசும்போது, தமிழகத்தில் சரியான தலைமைக்கு வெற்றிடம் இல்லை என்றார்.

முதல்வரின் இந்தப் பேச்சு குறித்து விமானநிலையத்தில் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதில் கூற விரும்பவில்லை என்று கூறி அங்கிருந்து விடை பெற்றார் ரஜினிகாந்த்.

Also see:

Loading...

First published: November 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...