ரஜினிகாந்தின் தர்பார் லாபமா?... நஷ்டமா...?

ரஜினிகாந்தின் தர்பார் லாபமா?... நஷ்டமா...?
ரஜினிகாந்த்
  • Share this:
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நயன்தாரா ஆகியோர் நடிப்பில் ஜனவரி 9-ம் தேதி ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் தர்பார் திரைப்படம் வெளியானது.

ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்த இந்த திரைப்படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

ரஜினியின் துள்ளலான நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்ட நிலையில் படத்தின் இரண்டாவது பாதி பெரும் ஏமாற்றமாக அமைந்தது படத்துக்கு பின்னடைவாக மாறி சமூக வலைதளங்களில் படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் அதிகளவில் வெளிவரவும் காரணமாக அமைந்தது.


அனிருத் இசையில் சும்மா கிழி தவிர எஞ்சிய பாடல்கள் கவனம் பெறாதது படத்தின் வெற்றிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. அதே போல பின்னணி இசையில் அதிக இரைச்சல் இருந்ததும் குடும்ப ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியது. இதனால் பேட்ட படத்தின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்த அனிருத்தின் இசையே இந்தப் படத்தின் எதிர்மறையான விமர்சனத்துக்கு காரணமாகவும் மாறியது.‘தரமான சிங்கிள்’ பாடலில் இடம்பெற்ற நயன்தாரா ரஜினி இடையிலான நடனக் காட்சி ரசிகர்கள் மத்தியில் ஈர்ப்பை பெற தவறினாலும் இதே பாடலில் யோகி பாபு உடன் ரஜினி செய்யும் சேட்டைகள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக ரஜினியின் ஒன் மேன் ஷோவாக தர்பார் திரைப்படம் அமைந்ததுள்ளது. ஆனால் படத்தில் நடித்த எஞ்சிய கதாபாத்திரங்களும் ரசிக்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தால் அது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கும்.ரஜினியின் மாஸ் கட்சிகளுக்கு தீனிபோடும் வண்ணம் பஞ்ச் டயலாக்குகள் இடம்பெறாதது ரஜினி ரசிகர்கள் ஏமாற்றத்திற்குள்ளாக்கியது. குறைந்த காட்சிகளிலேயே நயன்தாரா தோன்றுவது உள்ளிட்ட பல எதிர்மறை விமர்சனங்கள் தர்பார் படத்திற்கு எழுந்தாலும் தொடர் விடுமுறை காரணங்களால் தர்பார், ரஜினியின் நஷ்டம் ஏற்படுத்திய படங்களின் பட்டியலில் இடம்பெறாமல் தப்பியது.பொங்கலைக் குறிவைத்து நான்கு நாட்கள் முன்னரே வெளியானதால் படம் வெளியான நான்கு நாட்களில் தர்பார் திரைப்படம் 150 கோடி ரூபாய் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதன்பின்னர் ஜனவரி 15-ம் தேதி ‘பட்டாஸ்’ திரைப்படம் வெளியானதால் தர்பார் திரைப்படத்திற்கான திரையரங்குகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டது.

படம் வெளியான எட்டு நாட்களில் ஏறத்தாழ ரூ.200 கோடிக்கும் அதிகமாக தர்பார் திரைப்படம் வசூல் ஈட்டியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் ரஜினியின் நடிப்பில் ரூ.200 கோடி வசூல் ஈட்டிய 5-வது திரைப்படம் என்ற சாதனையை தர்பார் திரைப்படம் படைத்துள்ளது.மிக மோசமான விமர்சனங்கள் எழுந்தபோதும் விடுமுறை காரணங்களால் தர்பார் திரைப்படம் ரஜினியின் மோசமான வசூல் செய்த படங்களின் பட்டியலில் இருந்து தப்பித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி தர்பார் திரைப்படம் அதிகபட்சமாக 220 கோடி முதல் 230 கோடி ரூபாய் வரை வசூல் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் இதன்மூலம் தர்பார் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு 10 சதவீத நஷ்டத்தை ஏற்படுத்தலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Exclusive | பாண்டிராஜ் தான் ‘தளபதி 65’ இயக்குநரா? - விஜய் தரப்பு விளக்கம்!
First published: January 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading