Home /News /entertainment /

Rajinikanth: இன்று சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்!

Rajinikanth: இன்று சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

சில நாட்கள் ஓய்வெடுத்து விட்டு, ‘அண்ணாத்த’ டப்பிங் பணிகளில் ரஜினி கலந்துக் கொள்வார் எனத் தெரிகிறது.

    மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்க சென்றுள்ள ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்புகிறார்.

    'அண்ணாத்த' படப்பிடிப்பு முடிந்ததும், ரஜினிகாந்த் தனது மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்காவிற்கு சென்றார். அங்கு சில மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, சில நாட்கள் ஓய்வில் இருந்தார். பின்னர் அங்குள்ள தனது நண்பர்களின் வீடுகளுக்கு சென்று வந்தார். அந்த படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்நிலையில் அவர் இன்று சென்னை திரும்புகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ரஜினிகாந்த் முன்னதாக தனது மருத்துவ பயணம் குறித்து கவிஞர் வைரமுத்துவிற்கு தகவல் அளித்திருந்தார். அவர் நன்றாக இருப்பதாக வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டபோது, அந்த வார்த்தைகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தின. இந்நிலையில் தனது மருத்துவ பயணத்தை முடித்து, சென்னை திரும்பும் ரஜினியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

    சில நாட்கள் ஓய்வெடுத்து விட்டு, ‘அண்ணாத்த’ டப்பிங் பணிகளில் ரஜினி கலந்துக் கொள்வார் எனத் தெரிகிறது. சிவா இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’அண்ணாத்த’ படத்தில் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என நான்கு நடிகைகள் நடிப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Rajinikanth

    அடுத்த செய்தி