• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • என் சக ஊழியர் பஸ் டிரைவர் ராஜ் பகதூருக்கு நன்றி - ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

என் சக ஊழியர் பஸ் டிரைவர் ராஜ் பகதூருக்கு நன்றி - ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

கடந்த மார்ச் மாதம் இவ்விருது அறிவிக்கப்பட்டு, டெல்லியில் இன்று வழங்கப்பட்டது.

  • Share this:
    திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்ற ரஜினி, ஓட்டுநரை நினைவில் வைத்து, அவருக்கு நன்றி தெரிவித்தார்.

    திரைத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றார் நடிகர் ரஜினிகாந்த். இதுவரை எத்தனையோ விருதுகள் வாங்கியிருந்தாலும், இந்த விருது ரஜினிக்கும், உலகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்களுக்கும் ரொம்பவே ஸ்பெஷல்!

    தமிழ் சினிமாவில் இதுவரை நடிகர் சிவாஜி கணேசனும், இயக்குநர் பாலச்சந்தரும் மட்டுமே இந்த தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றுள்ளனர். அந்த வகையில் இந்த உயரிய விருதைப் பெற்ற மூன்றாவது நபர் ரஜினி தான். கடந்த மார்ச் மாதம் இவ்விருது அறிவிக்கப்பட்டு, டெல்லியில் இன்று வழங்கப்பட்டது.



    விருதைப்பெற்ற ரஜினிகாந்த் திரைத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதைப் பெறுவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இந்த விருதை தனது குரு இயக்குநர் பாலச்சந்தருக்கு அர்ப்பணிப்பதாகக் குறிப்பிட்டார். அதோடு தந்தை ஸ்தானத்தில் இருந்து தன்னை வளர்ந்த தனது அண்ணன் சத்யநாராயணா கெய்க்வாட், கர்நாடகாவில் பேருந்து நடத்துனராக இருந்தபோது, தனக்குள் இருந்த திறமையை அடையாளம் கண்டு, தன்னை நடிக்க அனுப்பி வைத்த பேருந்து ஓட்டுநரும், நண்பருமான ராஜ் பகதூர், தனது படங்களின் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தன்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தமிழ் ரசிகர்களுக்கும் இந்த விருதை உரித்தாக்குவதோடு, தனது நன்றியையும் தெரிவித்தார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: