ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரஜினியை பொன்னியின் செல்வன் கதையை படிக்கத் தூண்டிய ஜெயலலிதா!

ரஜினியை பொன்னியின் செல்வன் கதையை படிக்கத் தூண்டிய ஜெயலலிதா!

ரஜினிகாந்த் - ஜெயலலிதா

ரஜினிகாந்த் - ஜெயலலிதா

கல்கி உயிருடன் இருந்திருந்தால் அவரது இல்லத்திற்கு சென்று காலில் விழுந்திருப்பேன் என்றார் ரஜினிகாந்த்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், தன்னை அந்த புத்தகத்தை படிக்கத் தூண்டியது ஜெயலலிதா தான் என்ற சுவாரஸ்ய சம்பவத்தைக் கூறினார். அதை இங்கே குறிப்பிடுகிறோம்.

  பொதுவாக நான் ஒரு புத்தகத்தின் பக்க எண்ணிக்கையை வைத்து தான் படிக்க முடிவெடுப்பேன். சராசரியாக 200-300 என்றால் ஓகே, அதற்கும் மேல் என்றால் தொடவே மாட்டேன். பொன்னியின் செல்வன் பக்க எண்ணிக்கையைப் பற்றி கேட்ட போது 5 பாகம், 2000 பக்கம் வரும் என்றார்கள். அதனால் பொன்னியின் செல்வன் புத்தகத்தின் பக்கங்களின் எண்ணிக்கையை கேட்டுவிட்டு படிக்க வேண்டாம் என்று முடிவு எடுத்தேன்.

  1980-களில் ஒருமுறை மறைந்த முதல்வர் ஜெயலலிதா குமுதம் பத்திரிக்கையில் வாசகர் கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது பொன்னியின் செல்வன் கதையில் இடம்பெறும் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் இப்போது இருப்பவர்களில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற வாசகரின் கேள்விக்கு, ரஜினிகாந்த் என்று பதிலளித்திருந்தார். அதை கேட்டவுடன் குஷி ஆகிவிட்டேன். உடனே கொண்டு வாடா அந்த புத்தகத்தை என படிக்கத் தொடங்கினேன். படிக்க படிக்க ஆர்வமாக சென்று கொண்டே இருந்தது. கல்கி உயிருடன் இருந்திருந்தால் அவரது இல்லத்திற்கு சென்று காலில் விழுந்திருப்பேன்” என்றார் ரஜினிகாந்த்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பிக் பாஸ் தமிழ் 6 நிகழ்ச்சியின் ஆரம்ப தேதி அறிவிப்பு!

  மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Jayalalitha, Rajinikanth