Home /News /entertainment /

மாநாடு திரைப்படத்தை பாராட்டிய ரஜினிகாந்த் - மகிழ்ச்சியில் படக்குழு!

மாநாடு திரைப்படத்தை பாராட்டிய ரஜினிகாந்த் - மகிழ்ச்சியில் படக்குழு!

சிம்பு - மாநாடு

சிம்பு - மாநாடு

சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியான மாநாடு திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு பாராட்டியதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞனாக நடிக்க, யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

    மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படமும் அதே தினத்தில் வெளியாக தயாரானது. இதையடுத்து மாநாடு திரைப்படம் நவம்பர் 25-ம் தேதி வெளியாகும் என அறிவித்தனர் படக்குழு. அதன்படி, நேற்று வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தை பாராட்டியுள்ளது மிகுந்த உற்சாகம் அளிப்பதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது முகநூல் பதிவில் கூறியதாவது, இனிய நாளாக அமைந்துவிட்டது இந்நாள். சூப்பர் ஸ்டாரின் அழைப்பும் பாராட்டும் இப்படத்தின் வெற்றியை உறுதிசெய்திருக்கிறது.

    நல்லதைத் தேடிப் பாராட்டும் இம்மனசே இன்னும் உங்களை உச்ச சிம்மாசனத்தில் உயர்த்தி வைத்திருக்கிறது. மிகுந்த பலம் பெற்றோம். ஒட்டுமொத்த படக்குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி சார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Manadu, Rajinikanth

    அடுத்த செய்தி