ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரஜினியின் பேட்ட பட விவகாரம் : தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி மீது இரு பிரிவுகளில் வழக்கு!

ரஜினியின் பேட்ட பட விவகாரம் : தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி மீது இரு பிரிவுகளில் வழக்கு!

பேட்ட

பேட்ட

தகுந்த ஆதாரங்களோடு தயாரிப்பாளர் முரளி மீது புகார் அளித்துள்ளனர். தயாரிப்பாளர் முரளி மீது இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ரஜினியின் பேட்ட படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமை தருவதாகக் கூறி 15 கோடிகள் மோசடி செய்ததாக ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனரும், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவருமான முரளி மீது சென்னை மத்திய குற்றவியல் போலீசார் இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ரஜினியின் பேட்ட படம் வெளியாவதற்கு முன், அப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமை தன்னிடம் இருப்பதாகக் கூறி மலேசியாவைச் சேர்ந்த மாலிக் என்ற நிறுவனத்திடம் 30 கோடிகள் வாங்கியுள்ளார் தயாரிப்பாளர் முரளி. ஆனால், பிறகுதான் அந்த உரிமை முரளியிடம் இல்லை என்ற உண்மை பணம் தந்தவர்களுக்கு தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க.. கடைசியில் இதுதான் உங்க ட்விஸ்டா? கையெடுத்து கும்பிட்ட கண்ணம்மா!

இதனைத் தொடர்ந்து பதினைந்து கோடிகளை திருப்பித் தந்த முரளி, ஐந்து கோடிக்கு காசோலை தந்துள்ளார். மீதமுள்ள பத்து கோடிக்கு காஞ்சனா 3, நான் ருத்ரன் ஆகிய படங்களின் வெளிநாட்டு உரிமையை தருவதாக புதிய ஒப்பந்தம் போட்டுள்ளார். ஆனால், காஞ்சனா 3 படத்தின் வெளிநாட்டு உரிமை முரளியிடம் இல்லை, நான் ருத்ரன் திரைப்படமும் அறிவிப்போடு கைவிடப்பட்டது என்ற உண்மை தாமதமாகவே சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிய வந்துள்ளது. முரளி அளித்த ஐந்து கோடிகளுக்கான காசோலையும் பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது.

இதையும் படிங்க.. பிக் பாஸ் சீஸன் 5 நிகழ்ச்சி முடிந்தாலும் இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை!

தொடர்ச்சியாக தங்களை ஏமாற்றிய முரளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்ற வருட ஆரம்பத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாலிக் நிறுவனத்தின் தமிழ்நாடு நிர்வாக இயக்குனர் புகார் அளித்தார். ஆனால், இந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புகாரை ஜுன் மாதம் போலீசார் தள்ளுபடி செய்தனர். இந்நிலையில் மீண்டும் தகுந்த ஆதாரங்களோடு தயாரிப்பாளர் முரளி மீது புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு புகாரை ஏற்றுக் கொண்டதோடு தயாரிப்பாளர் முரளி மீது இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விரைவில் புகாருக்கு விளக்கம் கேட்டு முரளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Petta movie, Rajinikanth