Rajinikanth: 'சீனியர்கள் வேண்டாம்' தேசிங்கு பெரியசாமியுடன் இணையும் ரஜினி?

Rajinikanth: 'சீனியர்கள் வேண்டாம்' தேசிங்கு பெரியசாமியுடன் இணையும் ரஜினி?

தேசிங்கு பெரியசாமி - ரஜினி

ரஜினிக்கு தன்னிடம் கதை இருப்பதாக பேட்டி ஒன்றில் கூறினார் கே.எஸ்.ரவிக்குமார்.

  • Share this:
    பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார் என சீனியர்களுக்கு முதல் மரியாதை செலுத்தி வந்த ரஜினி கபாலியில் இருந்து தனது பாதையை மாற்றினார். லிங்காவின் தோல்வி அவரை எச்சரித்திருக்க வேண்டும். ரஞ்சித் இயக்கத்தில் கபாலி, காலா படங்களில் நடித்தவர், அடுத்து கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்தார். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்தார்.

    இதில் அவர், கடைசியாக நடித்த தர்பார் சரியாகப் போகவில்லை. எனினும் முடிவை ரஜினி மாற்றிக் கொள்ளவில்லை. சிவா இயக்கத்தில் நடிக்க கால்ஷீட் தந்தார். அண்ணாத்த என்ற அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு உள்பட ஏராளமானோர் நடிக்கின்றனர்.

    இந்நிலையில், ரஜினிக்கு தன்னிடம் கதை இருப்பதாக பேட்டி ஒன்றில் கூறினார் கே.எஸ்.ரவிக்குமார். ரஜினிக்காக அவர் ஒரு கதையை பல வருடங்களாக வைத்துள்ளார். சிரஞ்சீவி அந்தக் கதையை தனக்கு தரும்படி கேட்டதாகவும், ரஜினிக்காக அந்தக் கதையை வைத்திருப்பதாக கே.எஸ்.ரவிக்குமார் மறுத்ததாகவும் திரையுலகில் ஒரு செய்தி உண்டு. ரஜினியை வைத்து படையப்பா, முத்து உள்பட பல ஹிட் படங்களை தந்தவர் கே.எஸ்.ரவிக்குமார். ஒருகாலத்தில் ரஜினியின் ஆஸ்தான இயக்குனராக இருந்தவர்.

    எனினும் கே.எஸ்.ரவிக்குமாருக்கு வாய்ப்பு தரும் எண்ணம் ரஜினிக்கு இல்லை. மாறாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமிக்கு வாய்ப்பளித்திருப்பதாக கூறப்படுகிறது.

    அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும்போது ரஜினி - தேசிங்கு பெரியசாமி இணையும் படம் குறித்து அறிவிப்பு வரலாம். மேலும், கார்த்திக் கூப்பாராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவும் ரஜினி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: