நிறைமாத கர்ப்பிணியின் ஆசையை நிறைவேற்றிய ரஜினிகாந்த்!

நிறைமாத கர்ப்பிணியின் ஆசையை நிறைவேற்றிய ரஜினிகாந்த்!
ரஜினிகாந்த்
  • Share this:
நிறைமாத கர்ப்பிணியின் ஆசையை நடிகர் ரஜினிகாந்த் நிறைவேற்றி வைத்துள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர்கள் ஜெகதீஸ்வரி - ராகவா தம்பதி. கருவுற்றிருந்த ஜெகதீஸ்வரி ரஜினிகாந்தை நேரில் சந்திப்பது தான் ஆசை என்று தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஜெகதீஸ்வரியின் கணவரும் மனைவியின் ஆசையை எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் ரஜினிகாந்தின் போயஸ் தோட்ட இல்லத்திற்கு சென்று தினமும் அங்கு காத்திருந்துள்ளார்.

ஒருமுறை அவரைப் பார்த்த ரஜினிகாந்த் என்ன விஷயம் என்று கேட்க, தனது மனைவி உங்களைப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராகவா. ஆனால், ஏதோ ஒரு விஷயத்துக்காகத் தான் தன்னை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக எண்ணிய ரஜினிகாந்த் அதைப் பொருட்படுத்தாமல் சென்றுவிட்டார்.
மீண்டும் ஒருமுறை ராகவாவைப் பார்த்த ரஜினிகாந்த் என்ன என்று கேட்க, தன் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், உங்களைப் பார்க்க வேண்டும் என்று விரும்புவதாகவும் அதற்காகத்தான் தான் தினமும் உங்களது வீட்டின் முன்பு காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதைக் கேட்ட ரஜினிகாந்த் இதை நீ முன்பே தெரிவித்திருந்தால் நான் பார்த்திருப்பேன் என்று கூறி தம்பதியினரை நேரில் சந்தித்துள்ளார். அப்போது ஜெகதீஸ்வரிக்கு தன் கைகளால் வளையல் அணிவித்து அவரது ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளார் ரஜினிகாந்த்.
First published: December 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading