• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • குடியரசுத்தலைவர், பிரதமருடன் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்திப்பு!

குடியரசுத்தலைவர், பிரதமருடன் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்திப்பு!

பிரதமர் மோடியுடன் ரஜினிகாந்த்

பிரதமர் மோடியுடன் ரஜினிகாந்த்

இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் ரஜினி.

  • Share this:
    குடியரசுத் தலைவர் மர்றும் பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் நடிகர் ரஜினிகாந்த்.

    திரைத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இதுவரை எத்தனையோ விருதுகள் வாங்கியிருந்தாலும், இந்த விருது ரஜினிக்கும், உலகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்களுக்கும் ரொம்பவே ஸ்பெஷல்!

    தமிழ் சினிமாவில் இதுவரை நடிகர் சிவாஜி கணேசனும், இயக்குநர் பாலச்சந்தரும் மட்டுமே இந்த தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றுள்ளனர். அந்த வகையில் இந்த உயரிய விருதைப் பெற்ற மூன்றாவது நபர் ரஜினி தான். கடந்த மார்ச் மாதம் இவ்விருது அறிவிக்கப்பட்டு, டெல்லியில் கடந்த திங்கட்கிழமை வழங்கப்பட்டது.

    தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றுக் கொண்ட ரஜினி, இதனை தனது, வழிகாட்டி மற்றும் குருவாக இருந்து தன்னை உருவாக்கிய இயக்குநர் கே பாலசந்தருக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர்.



    இந்நிலையில் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் ரஜினி. அவருடன் அவருடைய மனைவி லதா ரஜினிகாந்தும் உடன் இருந்தார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரஜினி, ”மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களையும், பிரதமர் அவர்களையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: